ஜெயம் ரவியின் “இறைவன்” படத்தின் மாஸ் அப்டேட்.., படு குஷியில் கொண்டாடும் ரசிகர்கள்!!

0
ஜெயம் ரவியின்
ஜெயம் ரவியின் "இறைவன்" படத்தின் மாஸ் அப்டேட்.., படு குஷியில் கொண்டாடும் ரசிகர்கள்!!

நடிகர் ஜெயம் ரவியின் பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து இறைவன் படத்தை குறித்து அப்டேட் இணையத்தில் வெளியாகி உள்ளது.

நடிகர் ஜெயம் ரவி:

தமிழ் சினிமாவில் ஜெயம், தனி ஒருவன், சம்திங் சம்திங் போன்ற வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகராக கொடி கட்டி பறப்பவர் தான் நடிகர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் வரலாறு காணாத வசூல் சாதனை படைத்தது. மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதை தொடர்ந்து இயக்குனர் அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வந்த இறைவன் திரைப்படத்தை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஜெயம் ரவி நடிக்கும் இறைவன் படத்தின் ஷூட்டிங் இன்று முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

ராஜராஜ சோழனுக்கு தமிழக அரசு கொடுத்த கௌரவம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு!!

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த தனி ஒருவன் திரைப்படம் ரசிகர் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here