அமெரிக்கா டூ ஆக்ரா – டிரம்ப்பின் இந்திய பயண திட்டங்கள் என்னென்ன..?

0

அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று (பிப்ரவரி 24, 25) இந்தியா வருகிறார். அவரை சிறப்பான முறையில் வரவேற்க இந்திய அரசு தயாராக உள்ளது. இந்தியாவில் இரண்டு நாட்கள் இருக்கும் டிரம்ப் மற்றும் அவரது குடும்பம் பங்கேற்க உள்ள நிகழ்ச்சிகள் மற்றும் பயண திட்ட விபரம் இதோ…!

11.40க்கு இந்தியா வருகை..!

டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் இன்று சரியாக பிற்பகல் 11.40 மணிக்கு அஹமதாபாத் விமான நிலையம் வந்தடைவர். அவர்களை பிரதமர் மோடி வரவேற்க உள்ளார். அவர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு வழங்கப்பட உள்ளது. அங்கிருந்து சபர்மதி ஆசிரமம் சென்றடைகின்றனர். அந்த வழி நெடுகிலும் லட்சக்கணக்கான மக்கள் டிரம்ப்பை வரவேற்க உள்ளனர்.

மதியம் 12.15 மணிக்கு சபர்மதி ஆசிரமம் செல்கிறார் டிரம்ப். இதற்காக அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

நமஸ்தே டிரம்ப் – மதியம் 1.05 மணிக்கு குஜராத்தில் கட்டப்பட்டு உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்து அங்கு நடைபெறும் ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இதற்காக மட்டும் இந்திய அரசு 100 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது.

மாலை 3.30 மணிக்கு டிரம்ப் மற்றும் அவரது மனைவி ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலிற்கு செல்கின்றனர். இதனால் இன்று காலை 11 மணிமுதல் அங்கு மற்ற பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

பிப்ரவரி 24 (இன்று) இரவு 7.30 மணிக்கு டெல்லியில் உள்ள ஐ.டி.சி., மயூரா தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்குகின்றனர்.

பிப்ரவரி 25 காலை 10 மணிக்கு டில்லி ராஷ்டிரபதி பவனில் டிரம்ப்பிற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அதன் பிறகு 10.30 மணிக்கு ராஜ்கோட்டில் உள்ள காந்தி நினைவிடத்திற்கு சென்று டிரம்ப் அஞ்சலி செலுத்துகிறார்.

பிற்பகல் 11 மணிக்கு டில்லியில் உள்ள ஐதராபாத் ஹவுசில் மோடி – டிரம்ப் இடையே இந்திய-அமெரிக்க உறவு குறித்து உரையாடல் நடக்கிறது. மதியம் 12.40 மணிக்கு புதிய ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டு செய்திகள் வெளியிடப்படும்.

அன்று இரவு 7.30 மணிக்கு இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை டிரம்ப் சந்திக்கிறார். பிறகு சரியாக 10 மணிக்கு டிரம்ப் தனது விமானத்தில் அமெரிக்கா புறப்படுகிறார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here