‘முழுசா ஜெயலலிதாவாகவே மாறிய கங்கனாவைப் பார்’ – பிறந்தநாளை முன்னிட்டு தலைவி பட போஸ்டர் வெளியீடு..!

0
Thalaivi
Thalaivi

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் விழா இன்று (பிப்ரவரி 24) தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி கங்கனா ரனாவத் நடிக்கும் ‘தலைவி’ படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்..!

ஜெயலலிதா பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அனுசரிக்கப்படும் என முதலைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். அதையொட்டி இன்று தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் உறுதிமொழிகள் எடுக்கப்பட்டன. அதுமட்டுமில்லாமல் அதிமுக சார்பில் இன்று பல நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

விஜய் இயக்கத்தில்..!

ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து விஜய் இயக்கத்தில் தலைவி என்ற படம் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். இப்படத்தின் போஸ்டர் இன்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here