முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி – நியூஸிக்கு 100வது வெற்றி..!

0

இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் நியூஸிலாந்து அணி தனது 100வது டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது. ஆனால் இந்திய அணிக்கு இது முதல் சாம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டி தோல்வி ஆகும்.

பேட்டிங் சொதப்பல்..!

இந்திய அணியைப் பொறுத்தவரை பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருகிறது. எனவே இரண்டாவது போட்டியில் அணியின் பேட்டிங் தரவரிசையில் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கலாம். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 165 ரன்களும், நியூஸிலாந்து அணி 348 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

தொடர்ந்து மோசமான பேட்டிங்..!

இரண்டாவது இன்னிங்ஸில் 183 ரன்கள் பின்தங்கிய நிலையிலும் இந்திய அணியின் பேட்டிங் மோசமாக இருந்தது. நியூஸிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். நான்காம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 8 ரன்கள் முன்னிலையுடன் 191 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. நியூஸிலாந்து சார்பில் பவுலிங்கில் அசத்திய சவுத்தி 5, பவுல்ட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

முதல் தோல்வி..!

இதன் மூலம் இலக்கான 8 ரன்களை நியூஸிலாந்து அணி 1.4 ஓவரில் எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் நியூஸிலாந்து அணி தனது 100வது டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது. ஆனால் இந்திய அணிக்கு இது முதல் சாம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டி தோல்வி ஆகும்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here