முதல்நாள் சட்டப்பேரவை கூட்டத்திலிருந்து திமுக வெளிநடப்பு – ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு!!

0

தமிழகத்தில் இந்த ஆண்டிற்கான சட்டசபை கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வரும் சூழலில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சியான திமுக வெளிநடப்பு செய்துள்ளது.

சட்டசபை கூட்டம்

தமிழகத்தில் தற்போது சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த வருடத்தின் துவக்கமாக சட்டசபை கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த சட்டசபை கூட்டம் காலை 11 மணி அளவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. இந்த உரையை ஆளுநர் ஆங்கிலத்தில் வாசிக்க அதனை சபாநாயகர் தனபால் தமிழில் வாசித்தார். ஆளுநரின் உரை ஆரம்பிக்கும் முன்பே சட்டசபையின் எதிர்க்கட்சி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது.

நடிகை சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்துள்ளார் – காவல்துறை நீதிமன்றத்தில் தகவல்!!

ஆளுநர் உரையை வாசிக்க துவங்கும் போதே திமுகவினர் அவையில் சசசலப்பை ஏற்படுத்தினர். தொடர்ந்து ஆளுநர் தமிழகத்திற்கு பட்ஜெட்டில் ஒரு லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு அனைவரும் மகிழ்ச்சியடைய வேண்டும் எனவும் கூறினார். ஆனால் திமுகவினர் தொடர்ந்து வாக்குவாதம் செய்தனர். இதனால் ஆளுநர் கருத்துக்கு எதிர்ப்பு செய்தால் எதிர் கட்சியினர் 5 நிமிடங்களுக்கு சட்டசபையை விட்டு வெளிநடப்பு செய்து திரும்ப அவைக்கு வரலாம் என்று தெரிவித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆளுநரின் இந்த கருத்துக்கு எதிர் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சட்டசபையை விட்டு வெளிநடப்பு செய்தது. இந்த நிகழ்வு தொடர்பாக திமுகவினர் கூறுகையில், ராஜீவ்காந்தி கொலை சம்பவம் தொடர்பாக ஆளுநர் எந்த முடிவும் இதுவரை எடுக்காததால் அதை சுட்டிக்காட்டி ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவையை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here