கேப்டன் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி – பதட்டத்தில் தொண்டர்கள்!!

0

தேமுதிக தலைவரும் பிரபல நடிகருமான விஜயகாந்த் தற்போது சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது இதனை அறிந்த தொண்டர்கள் பதட்டம் அடைந்துள்ளனர்.

விஜயகாந்த்:

சினிமா, அரசியல் என அனைத்து துறைகளிலும் கலக்கியவர் தான் விஜயகாந்த். இவர் சினிமாவில் இருந்த காலத்தில் நடிகர் சங்கத்தை மிக சிறப்பாக வழிநடத்தி வந்தார். அதற்கு பின்பு தமிழக அரசியலிலும் தனது கால் தடத்தை பதித்தார் விஜயகாந்த். அந்த வகையில் தேமுதிக கட்சி என்ற கட்சியை தொடங்கி தேர்தலில் களம் கண்டு வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் கடந்த சில காலங்களாகேவ இவரது உடல் நிலை மிக மோசமான நிலையில் இருந்து வருகிறது.இதன் காரணமாக அவர் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வருவார். இவரது உடல் நிலை மோசமாக இருப்பதன் காரணமாக இவர் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கூட வாக்களிக்க வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

தடுப்பூசி செலுத்திக்கொண்ட லேடி சூப்பர் ஸ்டார் – இணையத்தில் காட்டுத்தீயாக பரவும் புகைப்படம்!!

இந்நிலையில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் இவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவசரமாக இவர் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தற்போது மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் தற்போது இந்த தகவலை கேட்ட அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் பதட்டமடைந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here