மாத்தி மாத்தி பேசி சித்திரவதை செய்த ரஜினிகாந்த்.., கடுப்பாகி வேற ஹீரோவை தேடி சென்ற இயக்குனர்!!

0
மாத்தி மாத்தி பேசி சித்திரவதை செய்த ரஜினிகாந்த்.., கடுப்பாகி வேற ஹீரோவை தேடி சென்ற இயக்குனர்!!
மாத்தி மாத்தி பேசி சித்திரவதை செய்த ரஜினிகாந்த்.., கடுப்பாகி வேற ஹீரோவை தேடி சென்ற இயக்குனர்!!

நடிகர் ரஜினியை வைத்து டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்க இருந்த நிலையில், தற்போது இயக்குனர் விலகியதன் காரணம் குறித்து முக்கிய தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்:

கோலிவுட்டில் எக்கச்சக்க ஹிட் படங்களை கொடுத்து, தற்போது வரை எந்த ஒரு நடிகருக்கும் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை விட்டு கொடுக்காத நடிகர் தான் ரஜினிகாந்த். இப்பொழுது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 14 என்று கூறி வந்த நிலையில், 80 சதவீதம் படப்பிடிப்பு முடிந்திருப்பதால் வெளியீட்டு தேதியை தள்ளி வைப்பதாக சமீபத்தில் செய்திகள் பரவின.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனை தொடர்ந்து அடுத்த படத்தை சிபி சக்கரவர்த்தி எடுக்க இருந்த நிலையில், திடீரென அவர் விலகியது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவர் விலகியதற்கான காரணம் தெரியாமல் ரசிகர்கள் மண்டையை பிச்சுட்டு திரிகிறார்கள். இந்த நிலையில் உண்மையான காரணம் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதவாது, நடிகர் ரஜினி சிபியிடம் கமல் நடித்த விக்ரம் திரைப்படம் போல் ஒரு கதையை கொண்டு வாருங்கள் என்று கூறியுள்ளார்.

ரஜினி வழியை பின்பற்றிய உலக நாயகன்.., அதிரடியாக ரீ ரிலீஸாகும் கமலின் இரட்டை வேட திரைப்படம்!!

அவரின் சொல்லை கேட்டு சிபி சக்கரவர்த்தி 3 மாதங்கள் அயராமல் உழைத்து ஒரு ஆக்சன் கதையை ரஜினியிடம் சொல்லி இருக்கிறார். அதற்கு ஆக்சன் கதை வேண்டாம் குடும்ப கதை இருந்தால் கொண்டு வாங்க என்று கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த சிபி ரஜினியை வைத்து படம் பண்ண முடியாது என்று லைக்கா நிறுவனத்திடம் சொல்லி விலகி விட்டார். மேலும் ரஜினியிடம் கூறிய ஆக்சன் கதையை வேறு ஒரு முன்னணி நடிகரை வைத்து எடுக்க சிபி முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here