ரஜினி வழியை பின்பற்றிய உலக நாயகன்.., அதிரடியாக ரீ ரிலீஸாகும் கமலின் இரட்டை வேட திரைப்படம்!!

0
ரஜினி வழியை பின்பற்றிய உலக நாயகன்.., அதிரடியாக ரீ ரிலீஸாகும் கமலின் இரட்டை வேட திரைப்படம்!!
ரஜினி வழியை பின்பற்றிய உலக நாயகன்.., அதிரடியாக ரீ ரிலீஸாகும் கமலின் இரட்டை வேட திரைப்படம்!!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் படத்தை குறித்து இணையத்தில் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

ஆளவந்தான் திரைப்படம்:

தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசராமல் நடிக்கும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் கமல்ஹாசன். தற்போது இவர் சங்கர் படைப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் திருப்பதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர், இதை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் இயக்க இருக்கும் KH 234 படத்தில் நடிக்க இருக்கிறார் கமல்.

சரவணன் மீனாட்சி கிளைமாக்ஸை காப்பி அடிக்கும் பாரதி கண்ணம்மா.., இதை உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கவே இல்லையே!!

இந்த நிலையில் கமலின் வித்தியாசமான நடிப்பில் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்ற ஆளவந்தான் திரைப்படம் குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது உலக நாயகன் இரட்டை வேடத்தில் நடித்து அசத்திய ஆளவந்தான் திரைப்படம் விரைவில் ரீ ரிலீஸ் செய்ய இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் புதிய டிஜிட்டல் ஒலியில் உருவாக இருக்கும் ஆளவந்தான் திரைப்படம் உலக மெங்கும் கிட்டத்தட்ட 1000 திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக கூறியுள்ளார். சமீபத்தில் ரஜினி நடித்த பாபா திரைப்படம் ரீ ரிலீஸ் செய்த நிலையில், தற்போது கமல் அவர் வழியை பின்பற்றி ஆளவந்தான் படத்தை ரிலீஸ் செய்கிறார் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here