‘தனுஷ் ஒரு கடவுளின் பிள்ளை’…,’வாத்தி’ இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பாரதிராஜா நெகிழ்ச்சி…,

0
'தனுஷ் ஒரு கடவுளின் பிள்ளை'...,'வாத்தி' இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பாரதிராஜா நெகிழ்ச்சி...,
'தனுஷ் ஒரு கடவுளின் பிள்ளை'...,'வாத்தி' இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பாரதிராஜா நெகிழ்ச்சி...,

‘வாத்தி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பாரதிராஜா நடிகர் தனுஷ் குறித்து சில நெகிழ்ச்சியான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

வாத்தி திரைப்படம்

நடிகர் தனுஷ் நடிப்பில் திரைக்கு வர இருக்கும் புத்தம் புதிய திரைப்படம் ‘வாத்தி’. இந்த திரைப்படத்தில் நடிகை சம்யுக்தா மேனன், சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குனர் வெங்கட் இயக்கத்தில் ஆக்ஷன் ட்ராமா வகையாக உருவாகியுள்ள ‘வாத்தி’ திரைப்படத்தில் நடிகர் தனுஷ் டீச்சராக நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்து வருகிறது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குனர் மற்றும் நடிகர் பாரதிராஜா, தனுஷ் குறித்து சில ஸ்வாரஸ்யமான விஷயங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். இந்த நிகழ்வில் அவர் பேசுகையில், ‘தனுஷ் ஒரு இறைவனின் குழந்தை. அவர் வைச்ச குறி தப்பாது. தனுஷ் போல வேற எந்த நடிகரும் ஹாலிவுட் சென்றார்களா.

மீண்டும் ட்ரெண்டிங்கில் ‘தளபதி 67’…,படம் வெளியாவதற்கு முன்னமே இப்படியா…,

யாரும் இல்லை. தனுஷ் ஒரு நல்ல மனிதர். இந்த நிகழ்ச்சிக்கு அவர் என்னை அழைத்தது என்னுடைய அனுபவத்திற்காக இல்லை. அவர் என் மேல் வைத்த பாசத்திற்காக தான். தனுஷை நான் அவன் என்று சொல்வதும் மரியாதை தான். அவன் என் மகன் மாதிரி’ என்று உருக்கமாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here