தாறுமாறான சுவையில் மட்டன் குடல் கிரேவி., இவ்ளோ tasteடா சமைத்து தந்தா NO சொல்ல மனசு வராது!!!

0
தாறுமாறான சுவையில் மட்டன் குடல் கிரேவி., இவ்ளோ tasteடா சமைத்து தந்தா NO சொல்ல மனசு வராது!!!
தாறுமாறான சுவையில் மட்டன் குடல் கிரேவி., இவ்ளோ tasteடா சமைத்து தந்தா NO சொல்ல மனசு வராது!!!

பொதுவாக அசைவ பிரியர்கள் சண்டே வந்தாலே நான் வெஜ் சாப்பிட ஆசைப்படுவார்கள். அந்த வகையில் அசைவத்திலே மிகவும் உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்க கூடிய மட்டன் குடலை வைத்து சூப்பரான ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்
 • மட்டன் குடல் – 1
 • மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
 • மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
 • மல்லி தூள் – 2 டீஸ்பூன்
 • தக்காளி – 3
 • சின்ன வெங்காயம் – 50 கிராம்
 • கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு
 • உப்பு – தேவையான அளவு
 • எண்ணெய் – தேவையான அளவு
 • கறிவேப்பிலை – சிறிதளவு
 • பட்டை, கிராம், ஏலக்காய் – சிறிதளவு
 • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

செய்முறை விளக்கம்

மட்டன் குடல் கிரேவி செய்வதற்கு ஒரு முழு குடலை சுத்தமாக கழுவி எடுத்துக் கொள்ளவும். பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் கறிவேப்பிலை போட்டு நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

அதன் பிறகு தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி இத்துடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் சேர்த்து வதக்கி கொள்ளவும். இத்துடன் நாம் சுத்தம் செய்து வைத்துள்ள குடலை சேர்த்து கிளறிவிட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி விடவும். ஒரு 15 நிமிடங்களுக்கு பிறகு சிறிதளவு கொத்தமல்லி இலைகளை கிள்ளி போட்டு அடுப்பை ஆப் செய்யவும். இப்போ நமக்கு சுவையான மட்டன் குடல் கிரேவி தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here