சைவ பிரியர்களா நீங்க.., NON-VEG ஸ்டைலில் தாபா காளான் கிரேவி.., பார்த்தாலே எச்சி ஊறும்!!

0
சைவ பிரியர்களா நீங்க.., NON-VEG ஸ்டைலில் தாபா காளான் கிரேவி.., பார்த்தாலே எச்சி ஊறும்!!
சைவ பிரியர்களா நீங்க.., NON-VEG ஸ்டைலில் தாபா காளான் கிரேவி.., பார்த்தாலே எச்சி ஊறும்!!

இந்த வார சண்டே வித்தியாசமாக காளானை வைத்து ”தாபா ஸ்டைல் காளான் கிரேவி” செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்
  • காளான் – 1/2 கிலோ
  • மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
  • மல்லி தூள் – 2 டீஸ்பூன்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
  • கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு
  • பச்சை மிளகாய் – 2
  • வெங்காயம் – 3
  • தக்காளி – 2
  • முந்திரி – 50 கிராம்
  • பட்டை, கிராம்பு, ஏலக்காய் – சிறிதளவு
  • கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
  • எண்ணெய் – 3 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

செய்முறை விளக்கம்:

தாபா ஸ்டைல் காளான் கிரேவி செய்வதற்கு கடாயை அடுப்பில் வைத்து 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். பின் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு அத்துடன் 2 பச்சை மிளகாய்களை நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். அதன் பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக பச்சை வாசம் போகும் வரை வதக்கவும் .

அதோடு 1 டீஸ்பூன் மஞ்சள், 1 டீஸ்பூன் மிளகாய் தூள், 2 டீஸ்பூன் மல்லி தூள் சேர்த்து, இத்துடன் நாம் கழுவி நறுக்கி வைத்துள்ள காளானையும் சேர்த்து நன்றாக வதக்கவும். இப்பொழுது 2 தக்காளி, மற்றும் ஊற வைத்த முந்திரி பருப்பை மிக்ஸியில் அரைத்து காளான் கிரேவியில் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். அதன் பிறகு கொத்தமல்லி இலைகளை கிரேவியில் சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும். இப்பொழுது நமக்கு சுவையான தாபா ஸ்டைல் காளான் கிரேவி கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here