ஷாக் நியூஸ் மக்களே., இந்த வாரத்தோடு கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலகுகிறாரா??

0
ஷாக் நியூஸ் மக்களே., இந்த வாரத்தோடு கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலகுகிறாரா??
ஷாக் நியூஸ் மக்களே., இந்த வாரத்தோடு கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலகுகிறாரா??

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல், இந்த நிகழ்ச்சியில் இருந்து நிரந்தரமாக உடனே வெளியேற போவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

கமல் முடிவு:

விஜய் டிவியில், ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். தற்போது இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் தொடங்கி வெற்றிகரமாக பைனலை நோக்கி நகர்ந்து வருகிறது. கடந்த 5 சீசன்களோடு, தற்போது நடக்கும் 6ம் சீசனையும் உலகநாயகன் கமல் தொகுத்து வழங்கி வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

சமீபத்தில் கமல், ராகுல் காந்தி நடத்தும் ஒற்றுமை நடை பயண யாத்திரையில் பங்கேற்க போவதாக அறிவித்திருந்ததால், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இவர் பங்கேற்க வேண்டிய நிகழ்ச்சிகளுக்கான எபிசோடுகளை வெள்ளிக்கிழமை ஷூட்டிங் செய்யப் போவதாக தகவல் வெளியானது. இது ஒரு புறம் இருக்க, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தற்போது உலகநாயகன் கமல் நிரந்தரமாக வெளியேற போவதாக நேற்றே தகவல் வெளியானது. இருந்தாலும், இந்த சீசனை முடித்த கையோடு, இதிலிருந்து வெளியேறுவார் என்றும், இதன் பிறகு பிக் பாஸை தொகுத்து வழங்க மாட்டார் என்றும் பேசப்பட்டது.

திருமணத்திற்கு பிறகு புது அவதாரத்தை கையில் எடுத்த ஹன்சிகா.., அப்படி என்ன பன்னிருக்காங்கனு பாருங்களே!!

ஆனால், அதிர்ச்சி அளிக்கும் விதமாக, இந்த வாரத்தோடு கமல் இதிலிருந்து வெளியேறப் போவதாக பேசப்படுகிறது. இந்தியன் 2 பட சூட்டிங், பணிகள் காரணமாக கமல் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கமல் இதிலிருந்து விலகினால், அவருக்கு அடுத்தபடியாக சிம்பு இந்த சீசனை தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதற்கான எந்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here