காரசாரமான மசாலா இல்லாமல் டேஸ்டியான மட்டன் ரெசிபி.., ட்ரை பண்ணி பாருங்க சுவை அள்ளும்!!

0
காரசாரமான மசாலா இல்லாமல் டேஸ்டியான மட்டன் ரெசிபி.., ட்ரை பண்ணி பாருங்க சுவை அள்ளும்!!
காரசாரமான மசாலா இல்லாமல் டேஸ்டியான மட்டன் ரெசிபி.., ட்ரை பண்ணி பாருங்க சுவை அள்ளும்!!

நாம் எப்பவும் மசாலா அரைத்து ஊத்தி தான் மட்டன் ரெசிபி சமைச்சிருப்போம். ஆனா இனி உங்க வீட்டில் மட்டன் வாங்குனா இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமா சமைச்சு பாருங்க.

தேவையான பொருட்கள்

  • மட்டன் – 1/2 கிலோ
  • மிளகு தூள் – 3 டீஸ்பூன்
  • தேங்காய் – 100 கிராம்
  • தேங்காய் எண்ணெய் – 3 டீஸ்பூன்
  • மிளகாய் வத்தல் – 4
  • உப்பு – தேவையான அளவு
  • சின்ன வெங்காயம் – 50 கிராம்
  • பட்டை ,கிராம், ஏலக்காய் – சிறிதளவு

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

செய்முறை விளக்கம்

மட்டன் ரெசிபி செய்வதற்கு ஒரு குக்கரில் 1/2 கிலோ மட்டனை வேக வைத்து கொள்ளவும். பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம், ஏலக்காய் ,சீரகம், மிளகாய் வத்தல் போட்டு பொரியவிடவும். அதன் பிறகு கறிவேப்பிலை போட்டு நாம் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

அதன் பிறகு நாம் வேக வைத்துள்ள மட்டனை இத்துடன் சேர்த்து 3 டீஸ்பூன் மிளகு தூள், தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கிளறி விடவும். அதன் பிறகு நாம் நறுக்கி வைத்துள்ள தேங்காயை இதோடு சேர்த்து 10 நிமிடங்கள் வேக வைத்த பிறகு அடுப்பை ஆப் செய்யவும். இப்பொழுது இந்த மட்டன் மிளகு கறி ரெசிபியில் சிறிதளவு கொத்தமல்லி இலைகளை போட்டு வீட்டில் உள்ளவர்களுக்கு பரிமாறினால் சுவை அள்ளும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here