மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் நெத்திலி மீன் வறுவல்.., சூப்பர் ரெசிபி உங்களுக்காக!!

0
மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் நெத்திலி மீன் வறுவல்.., சூப்பர் ரெசிபி உங்களுக்காக!!
மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் நெத்திலி மீன் வறுவல்.., சூப்பர் ரெசிபி உங்களுக்காக!!

நம்ம வீடுகளில் நெத்திலி மீன் வாங்கினால் இத்தனை நாள் குழம்பு வைத்து தான் சாப்பிட்டிருப்போம். ஆனால் சின்ன குழந்தைகள் குழம்பை பெரிதாய் விரும்பி சாப்பிடமாட்டார்கள். எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட கூடிய நெத்திலி மீன் வறுவல் ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • நெத்திலி மீன் – 1/2 கிலோ
  • மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – சிறிதளவு
  • மிளகு தூள் – 2 டீஸ்பூன்
  • கான்பிளவர் மாவு – 50 கிராம்
  • தேங்காய் எண்ணெய் – 3 டீஸ்பூன்
  • சன்பிளவர் ஆயில் – 250 கிராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

செய்முறை விளக்கம்

நெத்திலி மீன் வறுவல் செய்வதற்கு 1/2 கிலோ நெத்திலி மீனை சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும். பின் ஒரு பவுலில் 50 கிராம் கான்பிளவர் மாவு சேர்த்து அதோடு 2 டீஸ்பூன் மிளகாய் தூள், 2 டீஸ்பூன் மிளகு தூள்,சிறிதளவு மஞ்சள் மற்றும் 3 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.

இப்பொழுது நாம் கழுவி வைத்துள்ள நெத்திலி மீனை மசாலா கலவையோடு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். அதன் பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கொள்ளவும். பிறகு எண்ணெய் சூடானவுடன் மசால் தடவி வைத்துள்ள நெத்திலி மீனை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.இப்பொழுது நமக்கு மொறுமொறுப்பான நெத்திலி மீன் வறுவல் கிடைக்கும். இந்த வறுவலை குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here