Thursday, May 2, 2024

கொரோனாவை தொடர்ந்து மிரட்ட வரும் டெங்கு & மலேரியா – மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!!

Must Read

ஒரு நாளைக்கு தமிழகத்தில் மூவாயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை அடுத்து பருவமழை துவங்கியுள்ளதால் மழைக்கால நோய்களான டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் வராமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு:

தற்போது தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் பின்பற்றப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். அதனால் கொரோனா தொற்று பாதிப்பு ஒரு நாளைக்கு 3000 முதல் 4000 என்று எட்டியுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை குறைவதாக இல்லை. அதே போல் குளிர்காலங்களில் தொற்று பாதிப்பு மிக அதிகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியான நிலையில், சென்னையில் தற்போது 44 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

பருவமழை மற்றும் மக்கள் இயல்பு நிலைக்கு திருப்பியுள்ளதால் மழைக்கால நோய்களான டெங்கு மற்றும் மலேரியா பரவ ஆரம்பித்துள்ளது. இதனால் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது, “டெங்கு பாதிப்பு எப்போதும் ஜூன் மாதத்தில் இருந்து பரவ ஆரம்பிக்கும். ஆனால், இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு, பொது முடக்கம் காரணமாக மக்களின் அடர்த்தி குறைந்த காரணத்தால் டெங்கு மற்றும் மலேரியா போன்ற பாதிப்புகள் இல்லாமல் இருந்தது”

முன்னெச்சரிக்கை நடவடிக்கை:

“அதே போல் பருவ மழையும் இப்பொது தான் ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக டெங்கு மக்கள் மத்தியில் பரவ ஆரம்பித்துள்ளது. மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால் மேலும் பரவ வாய்ப்புகள் உள்ளது. அதனால் டெங்கு வராமல் தடுக்க அரசு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கொசுக்கள் வளர்வதை தடுக்க வேண்டும்”

ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும் – தேசிய கல்விக்குழு அறிவிப்பு!!

“பழைய பாத்திரங்களில் தண்ணீர் தேங்க விடாமல் பார்த்துக் கொள்வது, சுகாதாரமாக இருப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்களும் மேற்கொள்ள வேண்டும். டெங்கு நோய்க்கு ஒரே அறிகுறி காய்ச்சல் தான் அதனால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்” இவ்வாறாக தெரிவித்துள்ளார். அரசு சார்பில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

உலக கோப்பை 2024: இந்திய அணியின் சிறப்பம்சங்கள் என்னென்ன? முழு விவரம் இதோ!

இந்தியாவில் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்தபடியாக T20 உலக கோப்பை தொடர் வரும்  ஜூன் 2ம் தேதி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -