ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும் – தேசிய கல்விக்குழு அறிவிப்பு!!

0

ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த ஒன்றை தற்போது தேசிய ஆசிரியர் கல்விக்குழு அங்கீகரித்துள்ளது. அதாவது தகுதித் தேர்வில் ஒரு முறை தேர்ச்சி பெற்றால் அந்த சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு:

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 8ம் வகுப்பு வரை ஆசிரியர்கள் நியமனத்திற்கு தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமான ஒன்றாக உள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்களின் சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

இதனால் 2013ம் ஆண்டு TET தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் தங்களது பணியை தொடர, இந்த ஆண்டு மீண்டும் தேர்வெழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதனால் TET தேர்ச்சி சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும் வகையில் அறிவிக்கக்கோரி நீண்ட காலமாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களிடம் முறையிடப்பட்டது.

ஆனால் இதனை திட்டவட்டமாக மறுத்த அமைச்சர், 7 ஆண்டுகள் மட்டுமே TET சான்றிதழ் செல்லுபடியாகும் என உறுதிபட தெரிவித்தார். இந்நிலையில் தேசிய ஆசிரியர் கல்விக்குழு வெளியிட்டு உள்ள அறிக்கையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி (TET) பெறுபவர்களின் சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 7 ஆண்டுகள் மட்டுமே செல்லும் என்ற விதியில் மாற்றம் செய்யப்பட்டு அது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது. இதனால் ஆசிரியர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here