ட்விட்டர் அலுவலங்களில் சோதனையிட்ட போலீசார் – காரணம் என்ன??

0

சில தினங்களுக்கு முன்பு ஆளும்கட்சியான பாஜக கட்சி காங்கிரஸ் கட்சி மீது மோடியின் உருவத்தை கெடுக்க டூல்கிட் உருவாக்கியுள்ளதாக கூறி குற்றம் சாட்டியது. இதனை தொடர்ந்து தற்போது போலீசார் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

டூல்கிட்:

சில தினங்களுக்கு முன்பு நாட்டின் பிரதமரான நரேந்திர மோடிக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்காக காங்கிரஸ் கட்சி ஒரு டூல்கிட்டை உருவாகியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் கொரோனா வைரஸின் புதிய விவகாரத்தை ‘மோடி திரிபு’ மற்றும் ‘இந்தியா திரிபு’ என்று அழைப்பதன் மூலம் டூல்கிட் உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் பாஜக முன்வைத்த இந்த குற்றங்களை காங்கிரஸ் கட்சி மறுத்தது. தங்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்காக இந்த டூல்கிடை பாஜக கட்சியே உருவாக்கியது என்று காங்கிரஸ் கட்சி கூறியது. மேலும் இதுகுறித்து கடந்த வாரம் பாஜக செய்தி தொடர்பாளராக சம்பித் பத்ரா காங்கிரஸ் கட்சி தான் இந்த டூலிக்கிடை உருவாக்கியது என்று ட்விட் செய்தார்.

அரவிந்த் கண் மருத்துவமனை குழும தலைவர் மறைவு – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!!

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேலும் இது கையாளப்பட்ட ஊடகம் என்றும் இது காங்கிரஸ் கட்சியால் உருவாக்கப்பட்டது என்றும் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து டெல்லி சிறப்பு பிரிவு காவத்துறை அதிகாரிகள் டெல்லி மற்றும் குறுகிராமில் உள்ள ட்விட்டர் இந்தியா அலுவலங்கங்களில் டூல்கிட் தொடர்பான புகாரின் பேரில் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here