அரவிந்த் கண் மருத்துவமனை குழும தலைவர் மறைவு – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!!

0

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே முக்கிய பிரபலங்கள் உயிரிழந்து வரும் நிலையில் இன்று அரவிந்த் கண் மருத்துவ குழும தலைவர் சீனுவாசன் அவர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

அரவிந்த் கண் மருத்துவமனை:

தமிழகத்தில் கண் நோயாளிக்கு தக்க சிகிச்சைகளை வழங்கி நோயாளிகளின் குறையை போக்குவதில் முக்கிய பங்கினை வகித்து வருகிறது அரவிந்த் கண் மருத்துவமனை. இந்த மருத்துவமனைக்கு தமிழகம் முழுவதும் பல கிளைகள் உள்ளன. மிக பிரபல மருத்துவமனையாக இருந்தாலும் இந்த மருத்துவமனைகளில் ஏழை எளிய மக்கள் கஷடப்படாதவாறு தான் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதன் காரணமாகவே தமிழக மக்கள் இந்த மருத்துவமனையை நாடி வருகின்றனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அரவிந்த் கண் மருத்துவமனை குழும தலைவர் சீனிவாசன் அவர்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டார். அவருக்கு 89 வயது என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில் தீவிர சிகிச்சை பெற்ற அவர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் நீட் தேர்வு கிடையாது – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதிரடி!!

தற்போது சீனிவாசன் அவர்கள் மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார். இது அனைவரிடத்தும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவரது மறைவிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, ‘சிறந்த கண் மருத்துவ சேவையை வழங்கிய சீனிவாசன் மறைவு மருத்துவ உலகிற்க்கு பேரிழப்பாகும்’ என்று தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here