டெல்லியில் விவசாயிகள் தீவிர போராட்டம் – கனடா பிரதமர் ஆதரவு!!

0

டெல்லியில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ச்சியாக 6 ஆம் நாளாக போராட்டம் நடத்துவதால் மத்திய அமைச்சர்கள் இன்று இது குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர். அதே போல் விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு கனடா துணை நிற்கும் என்று கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்கள்:

நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு உதவும்படியாக இருக்கும் என்று மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை இயற்றி அதற்கு ஒப்புதலும் அளித்துள்ளது. ஆனால், இந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரளா, ராஜஸ்தான், அரியானா மற்றும் பஞ்சாப் உட்பட 6 மாநில விவசாயிகள் போராடி வருகின்றனர். கடந்த 6 நாட்களாக தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் வன்முறை நடைபெற்று விட கூடாது என்பதற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதே போல் டெல்லி மக்களும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து உதவியும் வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படி நிலையில் கனடா நாட்டு பிரதமர் அவர்கள், குருநானக் 551ஆம் ஆண்டு பிறந்த ஜெயந்தியை முன்னிட்டு ஒரு பேஸ்புக் லைவில் கலந்துகொண்டார். அப்போது அவர் விவசாயிகளின் போராட்டம் குறித்தும் பேசினார். அவர் கூறியதாவது, “அமைதியாக போராடும் இந்திய விவசாயிகளுக்கு கனடா நாட்டின் ஆதரவு இருக்கும். அவர்களின் உரிமைகளை பாதுகாக்க கனடா அரசு எப்போதும் துணை நிற்கும்” இவ்வாறாக தெரிவித்துள்ளார். ஆனால், அவரது இந்த கருத்திற்கு இந்தியா சார்பில் யாரும் உடனடியாக பதில் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாய தலைவர் திட்டவட்டம்:

தற்போது விவசாயிகளின் போராட்டம் குறித்து அடுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அது குறித்து பேச வேண்டும் என்றும் மத்திய விவசாய நல அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். அதே போல் இன்று டெல்லி விஞ்ஞான் பவனில் மத்திய அமைச்சர்களுடன் விவசாய அமைப்பு தலைவர்களும் பங்கேற்க வேண்டும் என்று அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்களான ராஜ் நாத் சிங், அமித் ஷா ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.

நடிகர் சிவகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி?? கொதித்தெழுந்த சூர்யா, கார்த்தி!!

இது குறித்து விவசாயிகளின் குழு அமைப்பு தலைவர்கள் கூறியதாவது “போராட்டத்தில் தற்போது ஐநூறுக்கும் மேற்பட்ட விவசாய குழுக்கள் பங்கேற்றுள்ளன. ஆனால், அதில் வெறும் 32 குழுக்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து விவசாய குழு அமைப்பு தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தால் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்போம். அது வரை எங்கள் போராட்டம் தொடரும்” இவ்வாறாக தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here