மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் ரீஎன்ட்ரி- புதிதாக களமிறங்கும் ‘இன் நோட் 1’ ஸ்மார்ட் போன்!!

0

உலகில் ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகமாக வந்துள்ள நிலையில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தனது புதிய ரக ஸ்மார்ட் போன் ஐ இன்று இணையத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தனது ரீஎன்ட்ரியாக மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 என்ற புதிய மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 :

மைக்ரோமேக்ஸ் போன் நிறுவனம் இந்தியாவில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகிறது. மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 போன் 5000mAh பேட்டரியை கொண்டுள்ளதால் நீண்ட நேரம் சார்ஜ் இருக்கும் வகையிலும், உடனடியாக சார்ஜ் ஏறும் வகையிலும் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 6.65 இன்ச் கொண்ட பெரிய அளவிலான டிஸ்பிளே & ஹோல்-பஞ்ச் மாடலில் செல்பி கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது. 4 GB ரேமில் கிடைக்கும்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

கேமராவின் அமைப்பு :

பின்புறத்தில் 48 மெகா பிக்ஸல் பிரைமரி கேமரா + 5 மெகா பிக்ஸல் அல்ட்ரா-வைடு லென்ஸ் + 2 மெகா பிக்ஸல் மேக்ரோ லென்ஸ் + 2 பிக்ஸல் டெப்த் சென்சார் கொண்டுள்ளது.

64 ஜிபி வேரியண்ட் 10,999 ரூபாய்க்கும், 128 ஜிபி ரூ.12,499க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here