‘வேளாண் சட்டங்களை திரும்ப பெறமுடியாது’ – மத்திய அரசு திட்டவட்டம்!!

0
The Union Minister for Rural Development, Panchayati Raj, Drinking Water & Sanitation and Urban Development, Shri Narendra Singh Tomar addressing at the launch of the Swachh Sarvekshan (Gramin)- 2017, in New Delhi on August 08, 2017.

வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி இந்தியா விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே 8ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.

வேளாண் சட்டங்கள்:

மத்திய அரசு சமீபத்தில் விவசாய நலன் கருதி என்று கூறி 3 வேளாண் சட்டங்களை அறிவித்தது. இந்த சட்டங்கள் மூலம் கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு மட்டுமே லாபமாக அமைவது போல் தெரிகிறது. தற்போது இந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த நவம்பர் மாதம் 26ம் தேதி முதல் டெல்லியில் போராடி வருகின்றனர். போராட்டம் தொடங்கி 44 நாட்கள் ஆகியும் இன்னும் இவர்களது பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை. விவசாயிகள் டெல்லியின் சிங்கு, திகிரி, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லை பகுதிகளில் போராடி வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது வரை மத்திய அரசு விவசாயிகளுடன் 7 கட்டமாக பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது. இதில் கடந்த மாதம் நடத்த 6 வது கட்ட பேச்சுவார்த்தையில் வேளாண் கழிவுகளை எரிப்பதற்கு அபராதம், மின்கட்டண விவகாரம் போன்றவற்றிற்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ஆனால் குறைந்தபட்ச விலைக்கு சட்டபூர்வமாக உத்தரவாதம் மற்றும் வேளாண் சட்டங்களை திரும்ப பெறுதல் ஆகியவற்றிற்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை.

8ம் கட்ட பேச்சுவார்த்தை:

தற்போது கடந்த 4ம் தேதி அன்று 7ம் கட்ட பேச்சிவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தையும் தோல்வியில் தான் முடிந்தது என்பது வருத்தத்திற்குரிய விஷயம். தற்போது மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில் டெல்லியில் உள்ள விஜியின் பவனில் 8ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் 40கும் மேற்பட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் இந்த பேச்சுவார்த்தை தொடங்கியது. பேச்சுவார்த்தைக்கு முன்பு மத்திய அமைச்சர் விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு காண்போம் என்று வாக்கு கொடுத்து சென்றுள்ளார். ஆனால் பேச்சுவார்த்தையின் போது மத்திய அமைச்சர் வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது என்று உறுதியாக கூறியுள்ளார்.

அடுத்த 3 மணிநேரம் – இந்த 6 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்!!

மேலும் இந்த சட்டங்கள் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்திற்கு மட்டும் அல்ல ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் தான் என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் 8ம் கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வி அடைந்துள்ளது. மேலும் இதில் ஓர் அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. பேச்சுவார்த்தையில் பங்கேற்ற விவசாயிகள் மேஜையில் ஓர் வாசகம் எழுதிவைத்துள்ளனர். இது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. அது என்னவென்றால், “வெற்றி பெறுவோம் அல்லது உயிரை விடுவோம்” என்று எழுதப்பட்ட அட்டைகளை அங்கு விட்டு சென்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here