விக்ரமின் ‘கோப்ரா’ படத்தின் டீஸர் நாளை வெளியீடு – படக்குழு அறிவிப்பு!!

0
cobra teaser

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் கோப்ரா. இப்படத்தின் டீஸர் நாளை இணையதளத்தில் வெளியாகும் என இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

டீஸர் வெளியீடு

இமைக்கா நொடிகள், டிமாண்ட்டி காலனி ஆகிய வெற்றி படங்களை இயக்கியவர் அஜய் ஞானமுத்து. இவரது இயக்கத்தில் நடிகர் விக்ரம், கே.ஜி.எப் பட புகழ் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது கோப்ரா. ஆஸ்கார் நாயகன் ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும் விக்ரமின் மாறுபட்ட பல வேடங்களில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியிருக்கிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ரஹ்மான் இசையமைப்பில் ஸ்ரேயா கோஷல் மற்றும் நகுல் அய்யங்கார் பாடியுள்ள ‘தும்பி துள்ளலோ’ பாடல் கடந்த ஜூன் 29 அன்று இணையத்தில் வெளியாகி பல பார்வையாளர்களை கவர்ந்தது நினைவு கூரத்தகக்கத்து. சமீபத்தில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. தற்போது இப்படத்தி டீஸர் நாளை வெளியாகும் என படத்தின் இயக்குனர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஆதிரா கதாபாத்திரத்தில் நடிக்க இதற்காக தான் ஒத்துக்கொண்டேன்’ – சஞ்சய் தத் விளக்கம்!!

இப்படத்தில் நடிகையாக நடித்துள்ள நடிகை ஸ்ரீநிதி, கே.ஜி.எப் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று கே.ஜி.எப் -2 படத்தின் டீசர் வெளியான நிலையில் தற்போது கோப்ரா படத்தின் டீசர் நாளை வெளியாகும் என அறிவித்துள்ளதால் ஸ்ரீநிதியின் ரசிகர்களுக்கு இது டபுள் ட்ரீட்டாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here