‘ஆதிரா கதாபாத்திரத்தில் நடிக்க இதற்காக தான் ஒத்துக்கொண்டேன்’ – சஞ்சய் தத் விளக்கம்!!

0

தற்போது அனைத்து மொழி ரசிகர்களும் ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டிருக்கும் படம் தான் கே.ஜி.எஃப் 2 திரைப்படம். இன்று அப்படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது. தற்போது இந்த படத்தில் வில்லனாக நடித்த சஞ்சய் தத் தான் இந்த படத்தை ஒப்புக்கொண்டதற்கான காரணத்தை வெளியிட்டுள்ளார்.

கே.ஜி.எஃப்:

கடந்த 2018ம் ஆண்டு யாஷ் நடிப்பில் வெளிவந்த படம் தான் கே.ஜி,எஃப் திரைப்படம். இந்த திரைப்படம் அனைத்து மொழி ரசிகர்களாலும் கவரப்பட்டது. . மேலும் இந்த படத்தில் அம்மா பாசத்தை அருமையாக வெளிப்படுத்தியுள்ளார்கள். ஆனால் அதைவிட இந்த படத்தில் சண்டை காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. அந்த அளவிற்கு சண்டை காட்சிகள் அனைத்தும் அருமையாக இருந்தது. இந்த திரைப்படம் மொத்தம் இரண்டு பாகங்களை பெற்றுள்ளது. இதில் முதல் பாகம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இதற்கான இரண்டாம் பாகம் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இன்று யாஷ் பிறந்தநாள் என்பதால் கே.ஜி.எஃப் 2 படத்தின் டீஸரை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். இது தற்போது வைரலாகி வருகிறது. இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரமான ஆதிரா கதாபாத்திரமாக சஞ்சய் தத் நடித்துள்ளார். இவரின் படத்தின் புகைப்படம் வெளிவந்து அனைவராலும் கவரப்பட்டது. தற்போது இவர் ஏன் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்ற தகவலை வெளியிட்டுள்ளார்.

teaser

இது குறித்து சஞ்சய் தத் கூறுகையியில்,” நான் இது வரை நடித்ததில் வித்யாசமான கதாபாத்திரம் என்றால் அது ஆதிரா கதாபாத்திரம் தான். கதைப்படி ஆதிரா அச்சமற்றவன், துணிச்சலானவன் மற்றும் இரக்கமற்றவனாக திகழ்வான். மேலும் இந்த கதாபாத்திரத்துக்காக உடல் தகுதியை மேம்படுத்துவது முக்கியமாக ஒன்றாக இருந்தது. இதற்காக ஒவ்வரு நாளும் சுமார் 1.5 மணிநேரம் மேக்கப் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் இந்த படத்திலும் முதல் பாகம் போல சண்டை காட்சிகள் அருமையாக இருக்கும். இந்த படத்தில் எனக்கும் யாசுக்கும் இடையேயான சண்டை காட்சிகள் கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடிக்கும்.

‘கடந்த ஆண்டை போல அதிமுக உடன் கூட்டணி தொடரும்’ – ஜி.கே.வாசன் அறிவிப்பு!!

மேலும் படத்தை பற்றி இயக்குனர் சொன்னதும் எனக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. மேலும் வில்லன் கதாபாத்திரத்தின் முரட்டுத்தனம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனக்கு வில்லனாக நடிப்பதற்கு ரொம்ப பிடிக்கும் எனவே இயக்குனர் கதை சொன்னவுடன் நான் உடனே ஒப்புக்கொண்டேன். இந்த படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல், நல்ல திறமையாளர். அவரிடம் இருந்து நான் அதிக பாடம் கற்றுக்கொண்டேன் என்று அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here