வேற லெவெலில் வெளியான சிம்புவின் ‘ஈஸ்வரன்’ ட்ரைலர் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு நடிப்பில் தற்போது ஈஸ்வரன் திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் அந்த படத்தின் ட்ரைலர் தற்போது ரிலீஸ் ஆகி உள்ளது. இதனால் சிம்புவின் ரசிகர்கள் பலரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

ஈஸ்வரன் ட்ரைலர்

தனது சிறு வயதில் இருந்தே நடித்து வரும் சிம்பு லிட்டில் சூப்பர் ஸ்டாராகவே மக்கள் மத்தியில் கருதப்படுகிறார். தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து பல ரசிகர்களின் நாயகனாகவும் பல பெண்களின் கனவு நாயகனாகவும் வலம் வந்தார். அதிகப்படியான சர்ச்சையில் சிக்கியவரும் சிம்பு தான். சில வருடங்களாக பல சரிவுகளை கண்டார் சிம்பு.

சில வருடங்களாக அவர் நடித்த படங்கள் பிளாப் தான். இருந்தாலும் அடுத்ததடுத்த படங்களில் நடித்தார். கடைசியாக அவர் நடித்த ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ படமும் அந்த அளவிற்கு ஹிட் அடிக்கவில்லை. இந்நிலையில் அவர் அதன் பிறகு நடித்த படம் தான் ஈஸ்வரன். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு ஆக்ஷன் படத்தில் நடித்து வந்தார்.  சில காலமாக உடல் எடையை அதிகமாக இருந்த சிம்பு இந்த படத்திற்காக தனது உடல் எடையை முற்றிலுமாக குறைத்துள்ளார். மேலும் இந்த படம் ஒரு கிராமத்து செட்டப்பில் படமாக்கப்பட்டுள்ளதால் மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கும் ஈஸ்வரன் திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி பட்டையை கிளப்பியுள்ளது. இந்த படத்தை சுசீந்திரன் இயங்குகிறார். மேலும் தமன் இசையமைக்கிறார். இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நித்தி அகர்வால் நடித்துள்ளார். பல முக்கிய பிரபலங்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர். அதாவது பாரதி ராஜா, நந்திதா ஸ்வேதா, மனோஜ் பாரதி ராஜா என பலரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ட்ரைலரே மிரட்டியுள்ளது. பல சண்டைக்காட்சிகளுடன் காதல் காட்சிகளும் இணைய ஒரு பாரம்பரிய படமாக உள்ளது ஈஸ்வரன் திரைப்படம்.  பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் 50% இருக்கைக்கு மட்டுமே திரையரங்குகள் அனுமதிக்கப்பட்டால் மாஸ்டர் படத்தை மட்டும் தான் வெளியிடுவோம் என திரையரங்கு உரிமையாளர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here