விவசாயிகள் போராட்டம் எதிரொலி – டெல்லி மெட்ரோ ரத்து!!

0

தற்போது விவசாயிகள் இன்று நாடு தழுவிய ரயில் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். இதனை முன்னிட்டு டெல்லியில் சில பகுதிகளில் தற்போது மெட்ரோ ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள்:

சுமார் கடந்த 80 நாட்களாக மத்திய அரசு விதித்த வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் இவர்களுக்கும் அரசுக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தை அனைத்தும் தோல்வியில் தான் முடிந்துள்ளது. விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நீடித்து வருவதால், தற்போது அதற்கு பலர் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். மேலும் இன்று விவசாயிகள் அடுத்த கட்டமாக ரயில் மறியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதுகுறித்து விவசாய சங்கத்தினர் கூறியதாவது, இன்று மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நாடு தழுவிய ரயில் மறியல் போரட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்று தெரிவித்தனர். இதனை அடுத்து பல முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்புக்காக பாதுகாப்பு படையினை குவித்துள்ளனர். மேலும் ரயில் சேவையை உறுதி செய்ய ரயில்வே அதிகாரிகளும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் பஞ்சாப், ஹரியானமற்றும் உத்தர பிரதேச பகுதிகளில் பாதுகாப்பு படையினரை குவித்துள்ளனர்.

‘ஹேமா பாரதிக்கும் வெண்பாவிற்கும் பிறந்த குழந்தை தான்’ – தவறாக புரிந்துகொள்ளும் கண்ணம்மா!!

அதுமட்டுமல்லாமல் தற்போது, திக்ரி எல்லை, பண்டிட் ஸ்ரீ ராம் சர்மா, பகதூர் சிட்டி உள்ளிட்ட மெட்ரோ ரயிலை பாதுகாப்புக்காக மூடப்பட்டுள்ளது. இதனை டெல்லி மெட்ரோ ரயில்வே தெரிவித்தது. மேலும் ரயில் சேவை தொடர்ந்து நடப்பதற்காக அனைத்து ரயில் நிலையங்களிலும் போலீசார் தீவிர நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here