டெல்லியில் 19வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம் – அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்பு!!

0

மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற கூறி, 19-வது நாளாக தொடரும் போராட்டதின் உச்சகட்டமாக இன்று விவசாய சங்கங்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளனர். அதில் ஆம் ஆத்மி கட்சியினரும் முதல்வர் கெஜ்ரிவாலும் பங்கேற்க உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தொடரும் போராட்டம்:

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கூறி பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்திவருகின்றனர் பல அரசியல் அமைப்புகளும் எதிர்கட்சியினரும் அதரவு அளித்துள்ளனர். இது குறித்து மத்திய அரசு பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியும் பயனில்லாமல் போனது. நாளுக்கு நாள் விவசாயிகள் போராட்டம் அதிகரித்து வரும் நிலையில் தற்போது உச்சகட்டமாக டெல்லி-அரியானா எல்லையில் உள்ள சிங்கு சந்திப்பில் விவசாய சங்கத் தலைவர்களின் பட்டினிப் போர் தொடங்கி உள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இன்று 19 நாளாக தொடரும் போராட்டத்தில் விவசாய சங்கங்களின் தலைவர்கள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியின் மற்றொரு எல்லையில் உள்ள திக்ரி மற்றும் உத்தரப் பிரதேச டெல்லி எல்லையிலும் விவசாயிகளின் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இங்கு 40 விவசாயிகளின் சங்கங்களின் அமைப்பினர் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி வருகின்றனர். விவசாய சங்கங்களுக்கு ஆதரவாக பல அரசியல் கட்சியினரும், எதிர் கட்சியினரும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் தற்போது முதல்வர் கெஜ்ரிவாலும் ஆம் ஆத்மி கட்சியினரும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவில் புனரமைப்பு பணியில் கிடைத்த தங்கப்புதையலை அள்ளிச்சென்ற மக்கள்!!

இதுகுறித்து உழவர் சங்க பொது செயலர் ஹரீந்தர் சிங் கூறுகையில், தூங்கிக் கொண்டு இருக்கும் மத்திய அரசை எழுப்பவே பட்டினி போராட்டம் நடைபெறுவதாக தெரிவித்துள்ளார். அதோடு, அனைத்து மாவட்ட முக்கிய நகரங்களிலும் நாடு தழுவிய போராட்டங்கள் நடத்தப்பட இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 3 வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் அறிவிக்க மத்திய அரசு ஒப்புக்கொண்ட நிலையிலும் அச்ச்சட்டங்களை திரும்ப பெறுவதே விவசாய சங்கங்களின் கோரிக்கையாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here