Thursday, April 25, 2024

சிம்புவின் “தமிழன் பாட்டு” சிங்கிள் ட்ராக் ரிலீஸ் – இன்று மாலை லிரிக் வீடியோ!!

Must Read

நடிகர் சிம்பு நடித்து வரும் “ஈஸ்வரன்” படத்தின் முதல் சிங்கிள் பாட்டு இணையத்தளத்தில் ரீலீஸ் ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிம்பு இந்த படத்திற்காக கடினமாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை குறைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“ஈஸ்வரன்” படம்:

தமிழ் திரையுலகில் நடிகர் சிம்புவிற்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அவரது படங்களுக்காக மிகவும் கடினமாக உழைக்க கூடியவர் கூட. அவர் கடைசியாக நடித்த படங்கள் அவ்வளவாக வெற்றி அடையவில்லை. இதனால் திரையுலகை விட்டு காணாமல் போன சிம்பு கடந்த சில நாட்களுக்கு முன் பழையபடி தான் அனைத்து சமூகவலைத்தளங்களை பயன்படுத்த இருப்பதை தெரிவித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதில் தனது படங்களை குறித்த விவரங்களை தனது ரசிகர்களுக்கு தெரிவித்து வந்தார். தற்போது அவர் “ஈஸ்வரன்” மற்றும் “மாநாடு” படங்களில் நடித்து வருகிறார். இரு படங்களுக்கான மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

தமிழகத்தில் டிச.16 முதல் பருவமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை மையம் தகவல்!!

இதனையடுத்து அவர் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் “ஈஸ்வரன்” படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் அவர் பாம்பினை கையில் வைத்திருப்பது போல் வீடியோ வைரலாகி அது பெரும் சர்ச்சையாகி, பின் படக்குழுவினர் விலங்கு நல வாரியத்திற்கு விளக்கம் அளித்தனர்.

தற்போது இந்த படத்தின் சிங்கிள் பாடலான “தமிழன் பாட்டு” இன்று காலை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. தமன் இசையில் வெளியாகியுள்ள இந்த பாடலின் லிரிக் ட்ராக் இன்று மாலை 4:30 மணிக்கு வெளியாக உள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் கூடுதல் குஷியில் உள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -