#INDvsAUS 2வது டெஸ்டிலும் விலகிய வார்னர் – சிக்கலில் ஆஸ்திரேலிய அணி!!

0

இந்தியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி வரும் 26 ஆம் தேதி அன்று மெல்போர்னில் நடைபெறுகிறது. தனக்கு ஏற்பட்ட காயம் முழுமையாக சரியாகாத நிலையில் 2 வது டெஸ்ட் போட்டியில் இருந்தும் டேவிட் வார்னர் விலகியுள்ளர். இது ஆஸ்திரேலிய அணிக்கு சற்று பின்னடைவாக அமையும்.

இந்தியா vs ஆஸ்திரேலியா:

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி 20 தொடர்களில் விளையாடிய நிலையில் தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் நடந்து முடிந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. முதல் போட்டியில் காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் துவக்க ஆட்டக்காரரான வார்னர் பங்கேற்கவில்லை.

2வது டெஸ்டிலும் விலகிய வார்னர்:

இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 26ஆம் தேதி மெல்போர்னில் துவங்குகிறது. ஆனால் இந்த போட்டியிலும் வார்னர் பங்கேற்பாரா என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். தற்போது காயம் காரணமாக சிட்னியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார் வார்னர். ஆனால் சிட்னியில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அவர் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

விராட் கோஹ்லி இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு – ஸ்டீவ் ஸ்மித் கருத்து!!

தற்போது அவர் காயத்தில் இருந்து முழுமையாக குணமாகாத நிலையில் அவர் 2வது டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளார். மேலும் 2வது போட்டியில் பௌலர் அபார்டும் பங்கேற்க மாட்டார் என்று அறிவித்துள்ளது. இதனை அடுத்து சிட்னியில் நடக்கவுள்ள 3வது டெஸ்ட் போட்டியில் இவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here