ஊனமுற்றோர், முதியோர்களுக்கு தபால் வாக்கு வழங்க எதிர்ப்பு – திமுக வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!!

0

ஊனமுற்றோர் மற்றும் முதியோர்கள் வீட்டிலிருந்தவாறே தங்களது வாக்குகளை தபால் முறை செலுத்தலாம் என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை எதிர்த்து தி.மு.க. கட்சியின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று வந்த இந்த வழக்கின் விசாரணை ஜன.,7க்கு ஒத்திவைக்கப்பட்டது.

சட்டமன்ற தேர்தல்:

80 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் ஊனமுற்றோர் தங்களால் வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களிக்க முடியாத நிலையில் அவர்கள் விருப்பப்பட்டால் வீட்டில் இருந்தவாறே தங்கள் வாக்கை தபால் முறையில் வழங்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த முறையில் அதிகமாக கள்ள ஓட்டுகள் போடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இந்த திட்டத்தை எதிர்த்து தி.மு.க., வின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொரப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

வழக்கு தொடர்வதற்கு முன்பாக தேர்தல் ஆணையத்திடம் இந்த அறிவிப்பை திரும்ப பெறுமாறு மனு கொடுத்தது. அந்த மனுவிற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் தான் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் தி.மு.க. தரப்பு வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி இந்த வழக்கை டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் தீபக் தொடர்ந்த வழக்கைப் போல், ஜனவரி 7 க்கு ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கு – குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம்!!

டிசம்பர் 3 இயக்கம் என்பது மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் அனைத்தும் கண்ணியமான முறையில் அவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக தீபக் என்பவரால் தொடங்கப்பட்ட அமைப்பாகும். வழக்கறிஞர் வில்சனின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையிலான அமர்வு தபாலில் வாக்குகளை பெறுவது தொடர்பான வழக்கை ஜனவரி 7 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here