கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கு – குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம்!!

0

28 ஆண்டுகளுக்கு முன்னர் அபயா என்ற கன்னியாஸ்திரியை படுகொலை செய்த பாதிரியார் மற்றும் கொலைக்கு உறுதுணையாக இருந்த கன்னியாஸ்திரி ஒருவருக்கு கேரள நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இழுபறியில் இருந்து வந்த வழக்கு:

28 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரி அபயா செயின் பயஸ் கான்வென்ட் அருகில் இருந்த கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கினை மாநில நிர்வாகம் சரியாக விசாரிக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்ததால் வழக்கினை சிபிஐ விசாரித்தது. இந்த வழக்கு பலரது தலையீடு காரணமாக 28 ஆண்டுகளாக இழுபறியில் இருந்து வந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

வழக்கு விசாரணை முடிவில் கன்னியாஸ்திரி அபயா பாதிரியாளர்களான தாமஸ் கோட்டூர், ஜோஸ் புத்ருக்கயில் ஆகியோரால் கற்பழிக்கப்பட்டதும், அவர்களுடன் கன்னியாஸ்திரியான செபி அபாயவை கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் நேற்று தான் திருவனந்தபுரம் சிபிஐ நீதிமன்ற நீதிபதி கே.சனில்குமார் பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரி என இருவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளித்தார்.

இஸ்லாமாபாத்தில் மீண்டும் துவங்கிய இந்து கோவில் கட்டுமான பணி !!

இதனை அடுத்து இவர்களுக்கான தண்டனை விபரம் இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில் குற்றவாளிகளாக காட்டப்பட்ட பாதிரியாளர்களான தாமஸ் கோட்டூர், ஜோஸ் புத்ருக்கயில் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். 28 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here