அமேசானில் போன்ஸ் ஃபெஸ்ட் விற்பனை – இந்த 6 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி ஆபர்!!

0

அமேசான் ஃபேப் போன்ஸ் ஃபெஸ்ட் விற்பனை இன்று துவங்கியுள்ளது. கிறிஸ்துமஸ் தினம் வரை தொடரும் இந்த சிறப்பு விற்பனையின் போது குறிப்பிட்ட 6 ஸ்மார்ட்போன்களுக்கு அமேசான் நிறுவனம் அதிரடி ஆஃபர் அறிவித்துள்ளது.

அமேசான் ஃபேப் போன்ஸ் ஃபெஸ்ட்:

ஆன்லைனில் மிகவும் முக்கியமான விற்பனை தளம் அமேசான். இந்த நிறுவனம் வாடிக்கையாளர் அனைவருக்கு அவ்வப்போது ஆஃபர்களை வழங்கி வரும். தற்போதும் அதேபோல் அதிரடியாக ஆஃபரை அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் அதிகமாக விற்பனை செய்யப்படும் குறிப்பிட்ட 6 ஸ்மார்ட்போன்கள் மீது சுமார் 40 சதவீதம் தள்ளுபடி அறிவித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அமேசான் ஃபேப் போன்ஸ் ஃபெஸ்ட் விற்பனை இன்று துவங்கியுள்ளது. கிறிஸ்துமஸ் தினம் வரை இந்த சிறப்பு விற்பனை தொடரும். மேலும் எச்டிஎப்சி வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டை பயன்படுத்தி ஸ்மார்ட்போனை வாங்கினால் சுமார் ரூபாய் 1500 வரை தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது.

1. ஒன் பிள்ஸ் 8டி:

ஒன் பிள்ஸ் 8டி போனிற்கு 2000 ரூபாய்க்கான கூப்பன் கார்டை வழங்குகிறது. இதனை நீங்கள் போன் வாங்கிய 3 நாட்களுக்கு பின் பயன்படுத்தலாம். குறிப்பாக இது அனைத்து அக்கவுண்ட்டுகளுக்கும் பயன்படாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எச்டிஎப்சி வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வாங்கினால் ரூ.2000 மற்றும் டெபிட் கார்டை பயன்படுத்தினால் ரூ.1000 தள்ளுபடி பெறலாம் என்று அறிவித்துள்ளது.

2. சாம்சங் கேலக்சி எம் 51:

அமேசான் ப்ரைம் உறுப்பினர்கள் சாம்சங் கேலக்ஸி எம் 51 ஸ்மார்ட்போனை ஃபேப் போன்ஸ் பெஸ்ட் 2020 விற்பனையின் போது ரூ.21,749 க்கு வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் சூப்பர் அமோலேட் பிளஸ் டிஸ்பிளே, குவாட் ரியர் கேமரா அமைப்பு, 7,000 எம்ஏஎச் பேட்டரி போன்ற அசத்தல் அம்சங்களை கொண்டுள்ளது.

3. ஒன் பிளஸ் நோடர்ட்:

ஒன் பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனை வாங்கும் பயனாளர்கள் எச்டிஎப்சி வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தினால் ரூ.1000 மற்றும் டெபிட் கார்டை பயன்படுத்தினால் ரூ.500 தள்ளுபடி பெறலாம் என்று அறிவித்துள்ளது. மேலும் தங்களது பழைய ஸ்மார்ட்போன்களை எக்ஸ்சேஞ்ச் செய்தால் ரூ.15,000 வரை தள்ளுபடி பெறலாம் என்று அறிவித்துள்ளது.

4. சாம்சங் கேலக்ஸி எம் 31 எஸ்:

அமேசான் ப்ரைம் உறுப்பினர்கள் சாம்சங் கேலக்ஸி எம் 31 எஸ் ஸ்மார்ட்போனை ஃபேப் போன்ஸ் பெஸ்ட் 2020 விற்பனையின் போது ரூ.18,499 க்கு வாங்கலாம். 6.5 இன்ச் சூப்பர் அமோலேட் பிளஸ் டிஸ்ப்ளே, குவாட் ரியர் கேமரா அமைப்பு, 7,000 எம்ஏஎச் பேட்டரி போன்ற பிரதான அம்சங்களை கொண்டுள்ளது. இதனை வாங்கும் பயனாளர்கள் எச்டிஎப்சி வங்கியின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டை பயன்படுத்தினால் ரூ.1500, தங்களது பழைய ஸ்மார்ட்போன்களை எக்ஸ்சேஞ்ச் செய்தால் ரூ.15,000 வரை தள்ளுபடி பெறலாம்.

5. ரெட்மி 9 பிரைம்:

சியோமியின் ரெட்மி 9 ப்ரைம் (4 ஜிபி, 128 ஜிபி) ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,999 தான். இதன் உண்மையான விலை ரூ.13,999 ஆகும். மேலும் எக்ஸ்சேஞ்ஜ் சலுகையின் கீழ் ரூ.10,300 வரை அதிகபட்சமாக தள்ளுபடி பெறலாம். ரெட்மி 9 ப்ரைம் ஸ்மார்ட்போன் ஆனது 6.53 இன்ச் புல் எச்டி + டிஸ்ப்ளே மற்றும் 13 மெகாபிக்சல் குவாட் பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது.

6. நோக்கியா 5.3:

அமேசானின் ஃபேப் போன்ஸ் ஃபெஸ்ட் விற்பனையின் போது நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனின் விலை ரூ.11,999 தான். இதன் உண்மையான விலை ரூ.16,599 ஆகும். இது 6.55 இன்ச் எச்டி + டிஸ்ப்ளே, குவாட் ரியர் கேமரா அமைப்பு, குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 SoC ப்ராசஸர், 4 ஜிபி ரேம் போன்ற பிரதான அம்சங்களை கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here