‘ரஜினி, கமலை அடிக்கிற அடியில் எந்த நடிகரும் அரசியலுக்கு வரக் கூடாது’ – சர்ச்சையை கிளப்பிய சீமான்!!

0

தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களின் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர். மேலும் ரஜினியும், கமலும் அரசியலில் புதிதாக களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் சீமான் நாட்டை ஆள நடிகர்கள் தேவையில்லை என்று பேட்டியளித்துள்ளார்.

சீமான்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் கடந்த 2010 ஆம் ஆண்டு தமிழக மீனவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் நடத்திய போராட்டத்தில் சிங்கள கடற்படை தமிழர்களை தாக்கினால், தமிழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் சிங்கள மாணவர்களை தாக்க வேண்டி இருக்கும் என கூறியது கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் அவர் மீது தேச துரோக வழக்கு போடப்பட்டது. அந்த வழக்கு விசாரணை இன்று நீதிமன்றத்திற்கு வந்தது. அதன் பிறகு செய்தியாளர்களிடம் சீமான் பேட்டியளித்திருந்தார். அதில் தேர்தல் பற்றி பேசும்போது ‘ரஜினி, கமலை அடிக்கிற அடியில் விஜய் உட்பட எந்த நடிகரும் அரசியலுக்கு வர நினைக்க கூடாது.

ஊனமுற்றோர், முதியோர்களுக்கு தபால் வாக்கு வழங்க எதிர்ப்பு!!

ரஜினியும், கமலும் எம்.ஜி.ஆரை முன்வைத்து பேசுகின்றனர். ஆனால் அந்த ஓட்டுகள் எல்லாம் அதிமுக.,விற்கு தான் போய் சேரும். எம்.ஜி.ஆரை நானும் மதிக்கிறேன். ஆனால் அவர் பிரபாகரனுக்கு மதிப்பளித்ததால் தான். ஆனால் கல்வியையும், மருத்துவத்தையும் தனியாருக்கு கொடுத்தது அவர் தான். முல்லை பெரியாறு அணையின் உரிமையை கேரளாவிற்கு மாற்றியது அவர் தான் என்று கூறியுள்ளார். மேலும் நாட்டை ஆள நடிகர்கள் தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினியும், கமலும் அரசியலில் இறங்கியதில் இருந்து சீமான் அவர்களை பற்றிய பல கருத்துக்களை முன்வைத்து வருகிறார். படத்தில் நடித்து அதில் இருக்கும் ரசிகர்களின் செல்வாக்கை வைத்து அரசியல் செய்ய கூடாது என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் சீமான் பல படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here