Sunday, April 28, 2024

நாளைய போட்டிக்காக “மாஸ்டர் பிளான்” தீட்டும் “தல” தோனி – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

Must Read

நாளை நடக்கவுள்ள 13வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் “தல” தோனி பெரிதாக மாஸ்டர் பிளான் செய்து வருவதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

ஐபிஎல் போட்டி:

ஐபிஎல் 2020 போட்டி ஐக்கிய அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா போன்ற மூன்று நகரங்களில் நடைபெற உள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக உள்ள காரணத்தால் போட்டிகள் அங்கு நடைபெற உள்ளன. முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த இரு அணிகளும் நன்கு விளையாடக்கூடிய வீரர்களை பெற்றுள்ளது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

நாளை நடைபெற போகும் போட்டியில் கேப்டன் தோனி மும்பை அணியினை வீழ்த்த பலமாக திட்டம் தீட்டி வருகிறார். எப்போதுமே சுழல்பந்து வீசுவதற்கு மந்தமாக ஆடுகளம் தான் நன்றாக இருக்கும், அதனை பயன்படுத்தி தான் சென்னை அணி வெற்றி கோப்பையை நிலை நாட்டும்.

அதே போல் துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா நகரங்களில் இருக்கும் ஆடுகளங்களும் சுழற்பந்து வீசுவதற்கு வசதியாக இருக்கும். அதனால் கேப்டன் டோனி நாளைய போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்களை தான் களம் இறங்குவர் என்று எதிர்பார்க்கபடுகிறது.

சுழற்பந்து வீச்சாளர்கள்:

தற்போது அணியில் சுழற்பந்துவீச்சாளரான ஹர்பஜன் சிங் இல்லாவிட்டாலும், அவருக்கு பதிலாக அனுபவமுள்ள 4 சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். கூடுதலாக பியுஷ் சாவ்லாவும் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால் தற்போது அணியில் ரவீந்திர ஜடேஜா, பியுஷ் சாவ்லா, இம்ரான் தாஹிர், மிட்செல் சான்ட்னர் போன்ற அனுபவமுள்ள வீரர்களும் சாய் கிஷோர், கரன் சர்மா ஆகிய புதிய சுழற்பந்து வீச்சாளர்களும் இடம் பெற்றுள்ளனர்.

சீனாவில் தீவிரமாக பரவும் புதிய பாக்டீரியா காய்ச்சல் – அச்சத்தில் உலக நாடுகள்!!

இப்படியான வீரர்களை களமிறக்கி மும்பை அணி வீரர்கள் ரன்களை எடுக்க விடாமல் பார்த்துக் கொள்ள முடியும். இவர்களை தவிர்த்து அணியில் ஆல்-ரவுண்டர் பிராவோ, சாம் கர்ரன் போன்றோர் உள்ளதால் முதல் போட்டியில் சென்னை அணி வெற்றி பெறுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது. ஆனால், பேட்டிங்கை பொறுத்தவரை பார்த்தால் மும்பை அணி, சென்னை அணியை விட கூடுதலான மதிப்பினை கொண்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -