கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து Paytm செயலி நீக்கம் – விதிமீறல் புகாரால் நடவடிக்கை!!

0

கூகிள் நிறுவனம் பண பரிமாற்றத்திற்கான Paytm செயலியை Play Store இலிருந்து நீக்கியுள்ளது. அதே நேரத்தில் Paytm மால், Paytm Money மற்றும் அந்நிறுவனத்திற்கு சொந்தமான இன்னும் சில செயலிகள் கூகிள் பிளே ஸ்டோரில் உள்ளன. விதிமீறல் புகார்கள் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கூகிள் தெரிவித்து உள்ளது.

Paytm நீக்கம்:

இந்தியாவில் லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வரும் செயலி Paytm. வங்கிக்கணக்கில் இருந்து எளிதாக பணப்பரிமாற்றம் செய்ய உதவும் இந்த செயலி தற்போது கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது. ஆனால் ஆப்பிள் ஸ்டோரில் இருந்து நீக்கப்படவில்லை. விளையாட்டு சூதாட்டம் விதிமுறைகளை மீறிய காரணத்தால் கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து Paytm நீக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் Paytm செயலியை டவுன்லோட் செய்யவோ அல்லது அப்டேட் செய்யவோ இயலாது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இது குறித்து தெரிவித்த கூகிள் தனியுரிமை பாதுகாப்பு அதிகாரி, மீண்டும் மீண்டும் கொள்கை மீறல்கள் ஏற்பட்டால், நாங்கள் Google Play டெவலப்பர் கணக்குகளை முடக்குதல் உள்ளிட்ட தீவிர நடவடிக்கை எடுக்கலாம் என எச்சரித்துள்ளார்.

Paytm விளக்கம்:

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட Paytm நிறுவனம், வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்து உள்ளது. மேலும் தற்காலிகமாக பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட Paytm விரைவில் இணைக்கப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here