2021 ஐபிஎல் தொடர் – சிஎஸ்கே அணியில் வாட்சனுக்கு பதில் இவரா?? கசிந்த தகவல்!!

0

தற்போது இந்தியாவில் வைத்து நடக்கவிருக்கும் ஐபிஎல் போட்டிக்காக அனைத்து அணிகளும் தங்களது அணிக்காக வீரர்களை தேர்வு செய்ய காத்துக்கொண்டிருக்கின்றனர். தற்போது சிஎஸ்கே அணியில் வாட்சன் இல்லாத காரணத்தால் அவருக்கு பதில் மற்றொரு ஆஸ்திரேலியா வீரரை சிஎஸ்கே அணி தேர்ந்தெடுக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல்:

இந்தியாவில் வரும் ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை ஐபிஎல் தொடரை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த ஆண்டு மெகா ஏலம் இல்லாத காரணத்தினால் அடுத்த மாதம் 11ம் தேதி அன்று மினி ஏலம் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. மேலும் இதற்காக கடந்த 20ம் தேதி அன்று தங்களுக்கு தேவையில்லாத வீரர்களை அனைத்து அணிகளும் விடுவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இதற்காக அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களை விடுவித்து புதிய வீரர்களை ஏலத்தில் எடுக்க காத்து வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதேபோல் கடந்த தொடரில் சொதப்பிய சிஎஸ்கே அணி இந்த முறை தங்களது அணியை வலுப்படுத்த பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த முறை 5 வீரர்களை தங்களது அணியில் இருந்து கழட்டி விட்டுள்ளது. மேலும் கடந்த சீசன் இறுதியில் வாட்சன் ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார். இது சிஎஸ்கே அணிக்கு சற்று பின்னடைவாக அமையும். மேலும் சிஎஸ்கே அணி ஹர்பஜன், சாவ்லா, கேதர் ஜாதவ், முரளி விஜய் மற்றும் மோனுகுமார் ஆகியோரை விடுவித்துள்ளது. தற்போது இருப்புத்தொகையாக சிஎஸ்கே அணியிடம் ரூ.22.9 கோடி உள்ளது.

வாட்சனுக்கு பதில் இவரா??

எனவே சிஎஸ்கே அணி மற்ற அணிகள் விடுவிக்கும் வீரர்களை எடுக்கவும் அல்லது புதிய வீரர்கள் பலரை தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதன் முதற்கட்டமாக ராஜஸ்தான் அணி விடுவித்த ராபின் உத்தப்பாவை சிஎஸ்கே அணி தேர்ந்தெடுத்துள்ளது. இந்த முடிவை சிஎஸ்கே அணி ரசிகர்கள் பலர் மகிழ்ந்தும் பலர் விமர்சித்தும் வருகின்றனர். மேலும் ஹர்பஜன் இல்லாத காரணத்தினால் தலைசிறந்த ஸ்பீன்னரை தேர்ந்தெடுக்க சிஎஸ்கே நிர்வாகம் ஆர்வம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#INDvsENG டெஸ்ட் தொடர் – இங்கிலாந்து அணி வீரர்கள் அறிவிப்பு!!

மேலும் தற்போது வாட்சன் இல்லாத காரணத்தினால் மற்றொரு ஆஸ்திரேலியா வீரரை தேர்வு செய்ய சிஎஸ்கே நிர்வாகம் தயாராகி வருவது போல் தெரிகிறது. இந்தியாவிற்கு எதிரான சுற்றில் சிறப்பாக விளையாடிய கேமரூன் க்ரீனை தேர்வு செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தங்களது இருப்பு தொகையில் இருந்து ஒரு வீரருக்கு மட்டும் அதிகபட்சமாக 6 கோடி வரை செலவு செய்ய நிர்வாகம் தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here