#INDvsENG டெஸ்ட் தொடர் – இங்கிலாந்து அணி வீரர்கள் அறிவிப்பு!!

0

அடுத்த மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா அணி டெஸ்ட், டி 20 மற்றும் ஒருநாள் தொடரை பங்கேற்கவுள்ளது. இதில் இங்கிலாந்து அணி பங்கேற்கும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான வீரர்களின் பெயர் தற்போது அறிவித்துள்ளனர்.

இந்தியா vs இங்கிலாந்து:

அடுத்த மாதம் இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இங்கு வந்த இங்கிலாந்து அணி 4 டெஸ்ட் போட்டி, 5 டி 20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளை பங்கேற்கவுள்ளது. இதில் முதலாவதாக டெஸ்ட் போட்டி நடக்கவுள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டியும் சென்னையில் உள்ள மைதானத்தில் வைத்து நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டியும் அஹமதாபாத்தில் வைத்து நடைபெறும் என்றும் அறிவித்துள்ளனர். டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி மாதம் 5ம் தேதி முதல் தொடங்குகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்தியா அணியில் விளையாட போகும் வீரர்களின் பெயர்களை ஏற்கனவே அறிவித்துவிட்டது. தற்போது முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக விளையாட போகும் வீரர்களின் பெயர்களை தற்போது வெளியிட்டுள்ளனர். மொத்தம் 16 வீரர்களை கொண்ட பெயர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இலங்கை தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஆர்ச்சர் இந்தியா தொடருக்கான அணியில் திரும்பியுள்ளனர். இவர்களது வருகை இங்கிலாந்து அணியை சற்று வலுப்படுத்தியுள்ளது. மேலும் சாம் கரண், மார்க்வுட் மற்றும் பேர்ஸ்டோ ஆகியோருக்கு ஓய்வு அளிக்கபட்டுள்ளது.

கால்பந்து போட்டியில் அதிக கோல்கள் – ரொனால்டோ புதிய சாதனை!!

இந்தியாவிற்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி வீரர்கள்:

ஜோ ரூட் (C), ஆர்ச்சர், மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், டாம் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், பர்ன்ஸ், பட்லர், ஜாக் கிராவ்லி, பென் போக்ஸ், டான் லாரன்ஸ், ஜாக் லீச், டாம் சிப்லி, பென் ஸ்டோக்ஸ், ஆலி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here