கால்பந்து போட்டியில் அதிக கோல்கள் – ரொனால்டோ புதிய சாதனை!!

0

கால்பந்து போட்டிகளில் தற்போது ரொனால்டோ புதிய சாதனை படைத்து அசத்தியுள்ளார். இவர் இதுவரை விளையாடிய போட்டிகளில் அதிக கோள்களை அடித்து அசத்தியுள்ளார்.

ரொனால்டோ:

கால்பந்து போட்டியில் நட்சத்திர ஆட்டக்காரராக திகள்பவர் தான் ரொனால்டோ. இவர் போர்ச்சுகளின் நட்சத்திர வீரர். உலகில் சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்று கருதப்படுவர்.அதுமட்டுமல்லாமல் சர்வதேச போட்டிகளில் மொத்தம் 100 கோள்களை அடித்த இரு வீரர்களில் இவரும் ஒருவர். ரொனால்டோ இடம் பெற்றுள்ள ஜுவென்டஸ் அணி இத்தாலியன் சூப்பர் கோப்பையை 9 வது முறையாக கைப்பற்றி அசதியுள்ளது. இறுதி சுற்றில் நெபோலி அணியை 2-0 என்ற கணக்கில் தோற்கடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அவர் விளையாட்டில் மட்டும் சிறந்து விளங்காமல் வருமானம் அதிகமாக ஈட்டுபவர்களிலும் சிறந்து விளங்கி வருகிறார். அதேபோல் ஆண்டு தோறும் அதிக வருமானம் ஈட்டும் நபர்களின் பெயர்களை ஓர் பத்திரிகை நிறுவனம் தெரிவித்து வரும். அதன்படி போர்பஸ் பத்திரிகை கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் ரொனால்டோ 1 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தியா மதிப்பின் படி சுமார் ரூ. 7,554 கோடி ஆகும். இவ்வளவு அதிகமாக வருமானம் ஈட்டிய முதல் கால்பந்தாட்ட வீரர் என்ற பெருமையை அடைந்துள்ளார். மேலும் இதுவரை டைகர் வுட்ஸ் மற்றும் பிளாய்ட் மேவெதர் ஆகிய இரு விளையாட்டு வீரர்கள் மட்டுமே 1 பில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டியுள்ளார்கள். அவர்களுக்கு பின் தற்போது ரொனால்டோ அந்த இடத்தை பிடித்துள்ளார்.

புதிய சாதனை:

தற்போது கால்பந்து போட்டிகளில் ரொனால்டோ புதிய சாதனை ஒன்றை பதித்துள்ளார். அது என்னவென்றால் நடந்து முடிந்த இத்தாலியின் சூப்பர் கோப்பை இறுதி போட்டியில் ரொனால்டோ ஓர் கோல் அடித்தார். அந்த கோல் மூலம் சர்வதேச மற்றும் கிளப் போட்டிகளில் தனது 760வது கோலை அடித்து அசத்தியுள்ளார்.

நடராஜனுக்கு கொரோனா பரிசோதனை – தனிமைப்படுத்திக்கொள்ள அதிகாரிகள் அறிவுரை!!

அதுமட்டுமல்லாமல் 759 கோலை அடித்திருந்த ஜோசப் பிகானின் சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார். இவர் இதுவரை விளையாடிய 1040 போட்டிகளில் ரியல் மாட்ரிட் அணிக்காக 450 கோள்களும், மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக 118 கோள்களும், போர்ச்சுகல் அணிக்காக 102 கோள்களும், ஜுவென்டாஸ் அணிக்காக 85 கோள்களும் மற்றும் ஸ்போர்ட்டிங் லிப்ஸன் அணிக்காக 5 கோள்களையும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here