கோவிஷீல்டு தயாரிப்பு ‘சீரம்’ நிறுவனத்தில் தீ விபத்து- 5 பேர் பலியான பரிதாபம்!!

0

கொரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்டு மருந்தினை தயாரிக்கும் சீரம் இந்தியா நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தீயணைக்கும் படையினர் பலமணி நேரமாக தீயினை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.

தீ விபத்து:

புனேவில் அமைந்துள்ள இந்தியாவின் பிரபல மருத்து தயாரிப்பு நிறுவனமான சீரம் தற்போது கொரோனா தடுப்பு மருந்தினை கண்டறிந்து அதை இந்தியாவிற்கு வழங்கியதோடு மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது. இந்நிலையில் இன்று மதியம் அந்நிறுவனத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பெரும் சேதம் உண்டாகியுள்ளது. அந்நிறுவனத்தின் முதலாம் முனையத்தில் ஏற்பட்டுளா இந்த தீயினை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடிவருகின்றனர். 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயினை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த தீ விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகியிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் – விசாரணைக்கு உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்!!

மேலும் அதிர்ஷ்டவசமாக கோவிஷீல்டு மருந்து தயாரிக்கும் இடம் இதுவல்லவென்றும், தயாரிப்பு மற்றும் பாதுகாப்பு கிடங்குகள் பாதுகாப்பாக உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருந்து தயாரிக்குமிடத்திலோ அல்லது பாதுகாப்பு கிடக்கிலோ தீ விபத்து ஏற்பட்டு இருந்தால் பலகோடி ரூபாய் மதிப்புள்ள மருந்து வீணாகியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here