அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் – விசாரணைக்கு உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்!!

0

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் செய்து முதல் பரிசை வென்றதற்காக சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை செய்ய கோட்டாட்சியருக்கு உத்தரவிடபட்டுள்ளது.

ஆள்மாறாட்டம்:

உலக புகழ் வாய்ந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சமீபத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி மிக சிறப்பாக நடை பெற்றது. 800 க்கும் அதிகமான வீரர்களும் 700 க்கும் அதிகமான காளைகளும் பங்குகொண்ட அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த வீரர்களுக்கும், சிறந்த காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அவ்விதத்தில் 12 காளைகளை பிடித்ததாக கூறி கண்ணன் என்பவருக்கு முதல் பரிசாக தமிழக முதல்வர் அறிவித்த கார் வழங்கப்பட்டது. இரண்டாவது பரிசு கருப்பணன் என்பவருக்கு வழங்கப்பட்டது.

தந்தையின் கல்லறையில் மலர்தூவி அஞ்சலி – கிரிக்கெட் வீரர் சிராஜ் உருக்கம்!!

இந்நிலையில் ஆள்மாறாட்டம் செயது முதல் பரிசை வென்றிருப்பதாக இரணடாம் பரிசு என்ற கருப்பணன் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் ஒன்றினை அளித்துள்ளார். அந்த புகாரில் 33ம் எண் கொண்ட பனியனை அணிந்து முதலில் ஹரி கிருஷ்ணன் என்பவர் களமிறங்கியதாகவும், 3 சுற்றுகளுக்கு பிறகு அவருக்கு உகாரம் ஏற்பட்டதால் அவரால் போட்டியில் ஈடுபட முடியவில்லை. எனவே அவர் தனது பனியனை கண்ணன் என்பவருக்கு தந்து விட்டு போட்டியிலிருந்து வெளியேறிவிட்டதாகவும், அதன்பின்னர் அந்த பனியனை அணிந்துகொண்டு களமிறங்கிய கண்ணன் இறுதி சுற்றுவரை விளையாடி 12 மாடுகளை பிடித்ததாகவும் கணக்கிடப்பட்டு அவருக்கு தமிழக முதல்வர் அறிவித்த கார் பரிசாக வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கால்பந்து போட்டியில் அதிக கோல்கள் – ரொனால்டோ புதிய சாதனை!!

இப்புகாரினை பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் இது குறித்து விசாரணை நடத்துமாறு கோட்டாசியருக்கு உத்தரவிட்டுள்ளார். ஜல்லிக்கட்டு போட்டியின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள், ஆவணங்கள் மற்றும் சாட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடைபெறுமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here