அரசு மருத்துவக்கல்லூரியில் கூடுதல் கட்டணம் – கடலூரில் 45வது நாளாக மாணவர்கள் போராட்டம்!!

0

கடலூர் மாவட்டம் சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவகல்லூரியில் மாணவர்களுக்கான கல்வி கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக கூறி மருத்துவக்கல்லூரி மாணவர்கள் கடந்த 45 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

மாணவர்கள் போராட்டம்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் கலை, அறிவியல், இசை, பொறியியல், மருத்துவம் ஆகிய படிப்புகள் கற்றுக்கொடுக்கப்படுகிறது. கடந்த 2013 ம் ஆண்டு இப்பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட சில நிர்வாக குளறுபடிகள் காரணமாக பல்கலைக்கழகம் அரசின்கீழ் கையகப்படுத்தப்பட்டது. இதற்காக தனி சட்டம் ஏற்றப்பட்டு இப்பல்கலைக்கழகத்தை அரசின்கீழ் கொண்டுவந்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பல்கலைக்கழகத்தில் இருக்கும் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மட்டும் தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி மாணவர்கள் குற்றம் சாட்டி வந்தனர். அதாவது மற்ற கல்லூரிகளில் மாணவர்கள் வழங்கும் கல்வி கட்டணத்தை விட இந்த மருத்துவக்கல்லூரியில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அரசு கல்லூரியில் மாணவர்கள் மருத்துவம் படிக்க ரூ 13000 மும், பிற தனியார் கல்லூரியில் 3.80 லட்சமும் வசூலிக்கப்படுகிறது.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் – கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்!!

இந்த தொகையை காட்டிலும் 3 மடங்கு அதிகமாக சிதம்பரம் ராஜா முத்தையா கல்லூரியில் 5.6 லட்சம் வசூலிக்கப்படுவதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது 45 நாளாக இரவுபகல் பாராமல் மாணவர்கள், கல்லூரியில் அரசு வசூலிக்கும் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என கோரி பேரணி நடத்தியும், மெழுகுவர்த்தி ஏந்தியும், கருப்பு பலூன்களை பறக்க விட்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அரசு சார்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது வருத்தமான செய்தி என்பது அவர்களின் கருத்து.

தொடர்ச்சியாக மாணவர்கள் தற்போது காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை அளித்துள்ளது. ஆனால் மாணவர்கள் அனைவரும் கல்லூரி வளாகத்திற்குள்ளிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து மாணவர்கள் விடுதிக்குள் அவர்களை அனுமதிக்க மறுத்தது கல்லூரி நிர்வாகம். இதனால் கல்லூரி விடுதிக்குள்ளும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை முதல் மருத்துவக்கல்லூரி அவசர சிகிச்சை பிரிவில் இருக்கும் முதுநிலை மாணவர்களும் வகுப்புகளை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளனர். தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரையிலும் இந்த போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here