விரைவில் பயிற்சியை தொடங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் – ரசிகர்கள் உற்சாகம்!!

0

பல்வேறு தடைகளுக்கு பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ளன. இதற்கான தீவிர பயிற்சியில் மற்ற அணி வீரர்கள் ஈடுபட்டு வரும் வேளையில் சென்னை அணிக்கு போதாத காலமாக உள்ளது. அந்த அணியில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அனைவரும் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் இரண்டு பரிசோதனைகளுக்குப் பிறகு சென்னை அணி விரைவில் பயிற்சியை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சி:

ஐபிஎல் 2020 போட்டிகள் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி துபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபியில் நடைபெற உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வீரர்கள் தீபக் சாஹர் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் தவிர கேப்டன் எம்.எஸ்.தோனி மற்றும் பிற அனைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களும் வைரஸிற்கான மூன்றாவது சுற்று சோதனையை முடித்த பின்னர் வெள்ளிக்கிழமை மாலை முதல் பயிற்சியைத் தொடங்க உள்ளனர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

csk
csk

மேலும் ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 13 பேருக்கு இரண்டு வார தனிமை முடிந்த பிறகு தான் மீண்டும் பரிசோதனை செய்யப்படும் என அணியின் உரிமையாளர் சீனிவாசன் தெரிவித்து உள்ளார். கொரோனவால் பாதிக்கப்பட்டு உள்ள இரு வீரர்களும் இரண்டு சோதனைகளுக்கு பிறகு பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்படுவர். முக்கிய வீரர் சுரேஷ் ரெய்னா போட்டிகளில் இருந்து விலகி உள்ள நிலையில் கெய்க்வாட் அவரது இடத்தில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபல கால்பந்து வீரர் நெய்மருக்கு கொரோனா – ரசிகர்கள் அதிர்ச்சி!!

இந்நிலையில் ஐபிஎல் 2020 போட்டிகளுக்கான கால அட்டவணை இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல் போட்டியில் சென்னை அணி, மும்பையுடன் மோதும் என கூறப்படும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் விரைந்து பயிற்சியை தொடங்க வேண்டியது கட்டாயமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here