Friday, April 26, 2024

நவம்பரில் கட்சி துவங்கப்போகும் ரஜினி – கண்ணாமூச்சி ஆட்டத்துக்கு முடிவு!!

Must Read

வரும் நவம்பர் மாதத்தில் நடிகர் ரஜினி காந்த் அரசியலில் களமிறங்குவர் என்றும் புதிய கட்சியை அன்று அறிமுகப்படுத்துவார் என்றும் தகவல்கள் தெரிவித்துள்ளது.

அரசியல் பிரவேசம்:

தமிழ் திரையுலகின் “சூப்பர்ஸ்டார்” என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் பல வருடங்களாக அரசியலுக்கு வருவாரா?? என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களுக்கு மட்டுமன்றி அனைவரும் எதிர்பார்த்து வந்தனர். அவரும் தெளிவான முடிவு இல்லாமல் இப்பொது வருகிறேன்…அப்போது வருகிறேன் என்று கண்ணாமூச்சி காட்டி வந்தார். அவரது ரசிகர்களும் தொடர்ந்து அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

இந்த நிலையில் கடந்த வருடம் ஒரு பேட்டியில் தமிழ்நாட்டில் அரசியல் போக்கு சரி இல்லை, அதனை மாற்ற வேண்டும்” என்று கூறினார். அனைவரும் அவர் கட்சி தொடங்கி விடுவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால், கொரோனா பரவல் காரணமாக அவர் கட்சி தொடங்கும் பணிகள் தாமதிக்கப்பட்டது. தற்போது தேர்தல் நெருங்கும் சமயத்தில், அவர் கட்சி தொடங்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

நவம்பரில் துவக்கம்:

தற்போது அவர் வரும் நவம்பர் மாதம் கட்சி தொடங்கி விடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் மதுரையில் தனது கட்சி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பயிற்சியை தொடங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்!!

Rajinikanth was once humiliated and thrown out by a producer. He returned in a foreign car - Movies News

அவரது முதல் கட்சி மாநாடு மதுரையில் தான் நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பல காலமாக அரசியலுக்கு வருவேன் என்று அவர் ஆடிவந்த கண்ணாமூச்சி ஆட்டம் முடிவு பெற உள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -