அம்மாடியோவ்..! இன்ஸ்டாகிராமில் ரூ. 378 கோடி சம்பாதிக்கும் ரொனால்டோ..! 200 மில்லியன் பாலொவெர்ஸ் (Followers) மைல்கல்லை எட்டி புதிய சாதனை..!

0

நட்சத்திர கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவை இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் நபர்களின் எண்ணிக்கை 200 மில்லியன் ஆகா உயர்ந்து உள்ளது. இதன் மூலம் 200 மில்லியன் பேரால் பின்தொடரப்படும் முதல் மற்றும் ஒரே நபராக மாறியுள்ளார் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

200 மில்லியன் அம்மாடியோவ்..!

ஜூவாண்டஸ் கிளப் அணிக்காக விளையாடும் ரொனால்டோவிற்கு நாளுக்கு நாள் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போனது. தற்போது 200 மில்லியன் மைல்கல்லை எட்டி உள்ளது. இதன் மூலம் இந்த சாதனையை படைத்த ஒரே நபர் என்ற பெயரை இவர் பெற்று உள்ளார். இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ள ரொனால்டோ, தனது ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்து உள்ளார்.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

ஒரு போஸ்டிற்கு ரூ. 7 கோடி..!

ஹாப்பார் எச்.க்யூ என்ற இன்ஸ்டாகிராம் மார்க்கெட்டிங் நிறுவனத்தின் கணிப்பின் படி ரொனால்டோ தான் பதிவிடும் ஒரு ஸ்பான்சர் பதிவிற்கு ரூ. 7 கோடி சம்பாதிப்பதாக தெரிவித்து உள்ளது. இதன் படி ஆண்டு ஒன்றுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ரொனால்டோ ரூ. 378 கோடி சம்பாதிக்கிறார்.

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இது இவர் ஆடும் கிளப் அணியான ஜூவாண்டஸ் அணியின் ஆண்டு வருமானமான ரூ. 267 கோடியை விட மிக அதிகம். இவருக்கு அடுத்த இடத்தில் லியோனல் மெஸ்ஸி (ரூ. 182 கோடி) உள்ளார்.

Image result for youtube logo

யூடூப் சேனலில் தகவல்களைப் பெற இங்கே கிளிக்செய்யவும்

இன்ஸ்டாகிராமில் அதிகம் பேரால் பின்தொடரப்படுபவர்கள்..!

  1. கிறிஸ்டியானோ ரொனால்டோ (200 மில்லியன்)
  2. மெரிக்க பாடகி அரினா கிரேட் (173 மில்லியன்)
  3. ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன் (170 மில்லியன்)
  4. அமெரிக்க பாடகி செலினா கோமஸ் (167 மில்லியன்)
  5. அமெரிக்க பிரபலம் கையில் ஜென்னர் (160 மில்லியன்)
  6. கிம் கர்தாஷியன் (158 மில்லியன்)
  7. அர்ஜெண்டினாவின் லயோனல் மெஸ்சி (148 மில்லியன்)
  8. அமெரிக்க பாடகி பியான்ஸ் (139 மில்லியன்)
  9. பிரேசிலின் நெய்மர் (132 மில்லியன்)
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here