அசத்தலான ‘நண்டு ஆம்லேட்’ ரெசிபி – ஈஸியா செய்யலாம் வாங்க!!

0

தலைப்பை பார்த்த உடனே எல்லாரும் என்னது நண்டு ஆம்லெட் ஆ??? அப்டினு ஆச்சர்யப்பட்டு இருப்பீங்களே??? ஆமாங்க நண்டுல ஆம்லெட் செஞ்சு ஒரு முறை சாப்பிட்டு பாருங்க. அதோட டேஸ்ட்ட நீங்க மறக்கவே மாட்டீங்க. அவ்ளோ சுவையா இருக்கும். செய்வதும் ரொம்ப சுலபம் தான். எப்போதும் ஒரே மாதிரி ஆம்லெட் செய்யாம இந்த புதுமாதிரி ஆம்லெட் செஞ்சு உங்க குடும்பத்தையும் அசத்தலாம் வாங்க. “நண்டு ஆம்லெட்” எப்படி செய்யலாம்னு பாலம் வாங்க.

தேவையான பொருட்கள்:

நண்டு – 3

வெங்காயம் – 2

தக்காளி – 2

மிளகுத்தூள் – 1 டீ ஸ்பூன்

சீரகத்தூள் – 1 டீ ஸ்பூன்

இஞ்சி,பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

மல்லித்தழை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

முட்டை – 2

பச்சை மிளகாய் – 1

மஞ்சள் தூள் – 1 டீ ஸ்பூன்

செய்முறை:

முதலில் சுத்தம் செய்த நண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு கடாயில் நண்டு, உப்பு இஞ்சி,பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள் சிறிது தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். 10 நிமிடங்களில் நண்டு நன்கு வெந்து விடும். வெந்த நண்டுகளை ஆற விட வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆறிய பிறகு நண்டின் ஓட்டை பிரித்து உள்ள இருக்கும் நண்டின் சதையை தனியே எடுத்துக் கொள்ள வேண்டும். இதை தனியே வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய்,கறிவேப்பிலை,மல்லித்தழை இவற்றை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை, உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வதங்கிய பின்பு தனியே வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றிக் கொள்ள வேண்டும். அதில் வதங்கிய வெங்காயம்,தக்காளி கலவையை சேர்க்க வேண்டும். பின்பு தனியே வைத்திருக்கும் நண்டு, மஞ்சள் தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்கு அடித்து விட்டு ஒரு தோசைக்கல்லில் ஆம்லெட் போல் ஊற்ற வேண்டும். மேலே சிறிது எண்ணெய் ஊற்ற வேண்டும். தேவைப்பட்டால் சிறிது மிளகுத்தூள் சேர்த்து கொள்ளலாம். இப்பொழுது சூடான சுவையான “நண்டு ஆம்லெட்”ரெடி!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here