4 எம்எல்ஏ.,க்கள் அடுத்தடுத்து ராஜினாமா – திணறும் மம்தா பானர்ஜியின் அரசு!!

0

மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியான, மம்தா தலைமையிலான திரிணாமூல் காங்கிரசுக்கு புதிய நெருக்கடி எழுந்துள்ளது. தொடர்ச்சியாக அக்கட்சியின் MLA க்கள் பதவி விலகி அக்கட்சிக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர் . தற்போது மேலும் ஒரு MLA பதவி விலகியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மம்தா அரசுக்கு நெருக்கடி

மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் கட்சியான திரிணாமூல் காங்கிரசுக்கும், பஜக விற்கும் இடையில் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைப்பதில் கடும் போட்டி நிலவுகிறது. ப ஜ க இந்த தேர்தலில் மிகுந்த தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் திரிணாமூல் காங்கிரசுக்கு நெருக்கடி தரும் விதமாக தொடர்ந்து அதன் MLA க்கள் பதவி விலகி வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கடந்த இரு நாட்களில் மட்டும் அக்கட்சியை சேர்ந்த MLA க்கள் மூன்று பேர் பதவி விலகியுள்ளார். இது அக்கட்சிக்கு பெரும் நெருக்கடியாக கருதப்படுகிறது. இந்நிலையில் மேலும் நெருக்கடி தரும் விதமாக உத்தரகாந்த் தொகுதியின் MLA பானஸ்ரீ மைதி என்பவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து அதிர்ச்சியளித்துள்ளார்.மேலும் அவர் திரிணாமூல் காங்கிரசின் அணைத்து தொடர்புகளிலிருந்தும், பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுவதாக தெரிவித்துள்ளார்.

‘இந்தியாவில் நேரடி அந்நிய முதலீடு அதிகரித்துள்ளது’

தொடர்ந்து அக்கட்சியின் MLA க்கள் பதவி விலகுவதை தொடர்ந்து , கடந்த 3 தினங்களில் மட்டும் 4 MLA க்கள் ராஜினாமா செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். பதவி விலகிய பானஸ்ரீ மைதி அவர்கள் ப ஜ க வில் இணையவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது இங்கு குறிப்பித்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here