கொழுகொழு உடல் எடையை குறைத்து தேவதையாக மாறிய அனுஷ்கா – வைரலாகும் புகைப்படம்!!

0

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா ஷெட்டி. தமிழில் இரண்டு படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். பாகுபலி படத்தால் மக்கள் பலரையும் கட்டிப்போட்டவர். படத்திற்காக உடல் எடையை அதிகரித்திருந்த அனுஷ்கா தற்போது உடல் எடையை முழுமையாக குறைத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

அனுஷ்கா ஷெட்டி

தெலுங்கு நடிகையான அனுஷ்கா ஷெட்டி தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழில் மாதவனுடன் நடித்த ‘இரண்டு’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ஆரம்பத்தில் இவர் யோகா டீச்சராக தான் இருந்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நாகசைதன்யா இவருடன் கிளாஸ் செல்ல நடிகைக்கான அனைத்து திறமையும் இருக்க நாகர்ஜுனா தான் இவரை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். இவரின் முதல் படமான சூப்பர் திரைப்படம் செம ஹிட் அடித்தது. தெலுங்கு திரையுலகில் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வந்தார்.

அதன் பிறகு தான் இவருக்கு தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இரண்டு படத்திற்கு பிறகு விஜய் உடன் வேட்டை காரன் படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் ஹிட் அடிக்க தொடர்ந்து சூர்யா உடன் சிங்கம் படத்தில் நடிக்க ஆரம்பித்தார். இருவருக்கும் ஜோடி ஒத்து போக தமிழிலும் அனுஷ்காவிற்கு ஏக வரவேற்பு கிடைத்தது.

தெலுங்கிலும் தமிழும் வெளியான அருந்ததி படம் மாஸ் ஹிட். ஒரு நடிகையாக அவ்வளவு வீரமாக நடித்தது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இதனை வயதாகியும் அனுஷ்காவின் அழகு குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அருந்ததி திரைப்படம் மெகா ஹிட் என்றால் பாகுபலி மரண மாஸான திரைப்படம். இதுவரையிலும் எந்த படமும் எட்டாத அளவிற்கு லாபத்தை பார்த்தது. அனுஷ்காவும், பிரபாஸும் திருமணம் செய்துகொள்ள போவதாக சொல்லப்பட்டது. ஆனால் இது வரையிலும் இரண்டு தரப்பில் இருந்தும் எந்த பதிலும் வரவில்லை.

தமிழில் வெளியான இஞ்சி இடுப்பழகி படத்தில் உடல் எடையை அதிகரித்த அனுஷா குறைக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டார். இந்நிலையில் தற்போது அவர் உடல் எடையை முழுவதுமாக குறைத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here