25 நாடுகளுக்கு இந்திய கொரோனா தடுப்பு மருந்து ஏற்றுமதி – மத்திய வெளியுறவுத்துறை அனுமதி!!

0

இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் கோவிஷீல்டு தடுப்பு மருந்தை, கனடா தவிர 25 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய வெளியுறவுத்துறை அனுமதி அளித்துள்ளது. இதுவரை 1.68 கோடி தடுப்பூசிகள் 20 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு மருந்து ஏற்றுமதி

இந்தியாவில் கொரோனா அவசரகால பயன்பாட்டில் புனே சீரம் இன்ஸ்டிடியூட்யின் கோவிஷீல்டு தடுப்பூசியும், கோவாக்சின் தடுப்பூசியும் பயன்பாட்டில் உள்ளன. சீரம் இன்ஸ்டிடியூட்யின் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்தை வர்த்தக ரீதியில் ஏற்றுமதி செய்ய மத்திய வெளியுறவுத் துறை அனுமதி கொடுத்துள்ளது. இதற்காக கனடா தவிர்த்து 25 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்படவுள்ளது. இதற்காக சவூதி அரேபியா, பிரேசில், மொரோக்கா, மியான்மர், நேபாளம், செர்பியா உள்ளிட்ட நாடுகளுக்கு 2.40 கோடி தடுப்பு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுவரை மத்திய அரசு 1.05 கோடி டோஸ் மருந்துகளை ஏற்றுமதி செய்துள்ளது.

சிவகார்த்திகேயனுடன் இணையும் குக் வித் கோமாளி சிவாங்கி – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

முன்னதாக வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பூடான், இலங்கை உள்ளிட்ட 13 நாடுகளுக்கு 63 லட்சம் தடுப்பு மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 1.68 கோடி இந்திய தடுப்பூசிகள் வர்த்தகரீதியில் 20 நாடுகளுக்கு  ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.  சமீபத்தில் இந்தியாவிடம், கனடா அரசு 10 லட்சம் டோஸ் தடுப்பு மருந்துகளை வழங்க கோரியிருந்தது. ஆனால் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தடுப்பூசிக்கான பட்டியலில் கனடா நாடு இடம்பெறவில்லை.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இது குறித்து கனடா நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சி எம்.பி மைக்கேல் ரெம்பெல் கார்னர், இந்தியாவிலிருந்து தடுப்பூசி ஏற்றுமதி செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டதா என கேள்வி கேட்டார். அதற்கு கனடா பொதுசேவைத்துறை அமைச்சரான அனிதா ஆனந்த், ‘தடுப்பூசி தொடர்பாக பிரதமர் மோடியை தொடர்புகொள்ளவில்லை’ என கூறினார். மேலும் கனடா அரசு சார்பில் மத்திய அரசுடன் யார் தொடர்பு கொண்டது என்பதும் தெரியவில்லை என கூறியுள்ளார். அனிதா ஆனந்த் பேசிய காணொளி தற்போது சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here