கொரோனா தொற்று மாரடைப்பிற்கு வழிவகுக்கும் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!

0

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள் உள்ளிட்ட சுகாதார பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு அதிக ஆபத்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்று:

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு இன்னும் கட்டுக்கடங்காமல் உள்ளது. நமது உடலில் நுரையீரலை தான் கொரோனா வைரஸ் அதிகளவில் பாதிக்கும். இதன் காரணமாக சுவாச பாதிப்பு ஏற்பட்டு பலர் உயிரிழந்து உள்ளனர். ஆனால் சமீபத்திய சில மாதங்களில், கொரோனா பாதிப்புக்கு உள்ளவர்களுக்கு மாரடைப்பு போன்ற இதய பாதிப்புகள் அதிகளவில் ஏற்படுவதை நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் அல்லது இதய நோய்கள் உள்ளிட்ட சுகாதார பிரச்சனை உள்ளவர்களுக்கு பெருமளவில் பாதிப்பு ஏற்படுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

சமீபத்திய கண்டுபிடிப்புகளின்படி, கொரோனா தொற்று மார்பு வலி, மூச்சுத் திணறல், தலைச்சுற்றல், படபடப்பு, மயக்கம் போன்ற அறிகுறிகளுடன் மாரடைப்பு ஏற்பட வழிவகுக்கும். கொரோனா வைரஸின் கடுமையான அறிகுறிகளை கொண்டிருப்பவர்களைக் காட்டிலும் நீரிழிவு நோயின் சில உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதிக ஆபத்தில் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். இதய பாதிப்புகள் கொண்ட வயதான நோயாளிகளின் மரணம் அதிகரித்துள்ளதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்றுக்கு உள்ளன நோயாளிகளுக்கு கீழ்கண்ட பாதிப்புகள் இருந்தால் அவர்களுக்கு ஆபத்து அதிகம் என சமீபத்திய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

1. கரோனரி தமனி நோய், உயர் இரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு நோயாளிகள்
2. இதய அறுவை சிகிச்சைக்கான காத்திருப்பு பட்டியலில் உள்ள நோயாளிகள்,
3. இதய நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள்
4. இதய செயலிழப்பு, கார்டியோமயோபதி மற்றும் பிறவி சயனோடிக் இதய நோய் அல்லது ஹைபர்டிராஃபிக் கார்டியோமயோபதி கொண்ட கர்ப்பிணி பெண்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here