Thursday, April 25, 2024

ஊழியர்களின் நலன் கருதி 3 நாட்கள் வார விடுமுறை – கூகுள் நிறுவனம் அறிவிப்பு!!

Must Read

ஊழியர்களின் மனநலம் மற்றும் உடல் நலத்தை கருத்தில் கொண்டு உலகின் தலைசிறந்த நிறுவனமான கூகுள் தனது ஊழியர்களுக்கு 3 நாட்கள் வார விடுமுறை அளித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு:

கடந்த சில மாதங்களாக அனைத்து நாடுகளிலும் கொரோனா நோய் பரவல் காரணமாக ஊரடங்கு பின்பற்றபட்டு வந்தது. இதனால் பல துறைகளில் பாதிப்புகள் ஏற்பட்டன. முக்கியமாக, தொழில்துறையில் பணியாளர்கள் அலுவலகத்திற்கு செல்ல முடியாமல் தவித்தனர். கொரோனா ஊரடங்கு தொடர்ந்து நீடித்து வந்ததால் அனைத்து நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை பார்க்கும்படி அறிவுறுத்தியது. இதனால் கடந்த 4 மாதங்களாக அனைவரும் “Work from Home” பார்த்தனர்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

work from home
work from home

இது ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் பின் இந்த முறையினை அனைவரும் பழகி கொண்டனர். இப்படியாக இருக்க 150 நாட்களாக மேலாக பின்பற்றபட்டு வந்த கொரோனா பொது முடக்கம் தற்போது சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை அலுவலகத்திற்கு வந்து வேலை பார்க்கும்படி கேட்டுக்கொண்டது.

கடந்த 5 மாதங்களாக வீட்டில் இருந்து சுதந்திரமாக வேலை பார்த்துவிட்டு மீண்டும் அலுவலகம்,பணிச்சுமை, கலந்தாய்வு கூட்டம், இரவு-பகல் வேலை என்று பணியாளர்கள் மனஅழுத்தத்திற்கு உள்ளாக வாய்ப்புகள் இருப்பதாக தெரிந்ததால், கூகுள் நிறுவனம் தங்கள் பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை அளித்துள்ளது.

கூகுள் அறிவிப்பு:

வீட்டில் இருந்து வேலை பார்த்துவிட்டு மீண்டும் அலுவலகத்திற்கு வந்து வேலை பார்க்க ஊழியர்கள் பழக வேண்டும் என்பதற்காக கூகுள் நிறுவனம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. பணியாளர்களின் உடல் மற்றும் மனநலன் தான் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு இந்த விடுமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ரெஸ்டாரண்ட் ஸ்டைல் தந்தூரி சிக்கன்’!!

google office
google office

வாரத்தில் வெள்ளிக்கிழமையில் இருந்து விடுமுறைகள் அளிக்கப்படுகின்றது. ஏதேனும் அவசரமாக இருந்தால் வெள்ளிக்கிழமை விடுமுறையை மற்றொருநாளில் மாற்றிக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொற்று நோய் காலத்தில் பணியாளர்களின் உடல் நலன் தான் முக்கியம் என்று கூகுள் நிறுவனம் கருதுகிறது. கூடுதலாக மற்ற நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் தங்கள் நிறுவனத்தில் பணிக்கு சேர வேண்டும் என்பதற்காக கையாளப்படும் யுக்தி என்று கூட இதனை எடுத்துக்கொள்ளலாம்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -