கொரோனா வைரஸின் முடிவுகாலம் நெருங்கி விட்டது – நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியின் கணிப்பு..!

2
292

உலகம் முழுவதையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் முடிவுகாலம் நெருங்கி விட்டதாகவும், நிலைமை தற்போது இருப்பதை விட சிறப்பாக மாறும் எனவும் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி மைக்கேல் லெவிட் கணித்து உள்ளார்.

உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா..!

உலகில் தங்களை விட பெரிய பலம் வாய்ந்த நாடு இல்லை என மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்காவே கொரோனா பாதிப்பால் தற்போது கதிகலங்கி போய் உள்ளது. அங்கு பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.4 லட்சத்தை தாண்டி விட்டது. இனி வரும் காலங்களில் அதன் பாதிப்பு உக்கிரமாக இருக்கும் என்பதால் பலமடங்கு பாதிப்பும், உயிரிழப்பும் ஏற்படக்கூடும்.

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக உயிர் இயற்பியலாளரும், வேதியலுக்கான நோபல் பரிசு பெற்றவருமான மைக்கேல் லெவிட் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது, தற்போதைய நிலைமை சிறப்பானதாக மாறிவிடும் என்று தெரிவித்து உள்ளார். மேலும் சமூக விலகல் இந்த நேரத்தில் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு அவசியமான ஒரு சக்தியை உலகிற்கு அளித்துள்ளது.

சீனா குறித்து துல்லிய கணிப்பு..!

சீனாவில் 80,000 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்படுவார்கள் மற்றும் 3,250 உயிரிழப்புகள் ஏற்படலாம் என்று மைக்கேல் லெவிட் மதிப்பிட்டு இருந்தார். அதுபோலவே நடந்து உள்ளது. சீனாவில் 3,277 உயிரிழப்புகள் ஏற்பட்டதுடன், 81,171 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

அவரின் கூற்றின் படியே, சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், சீனாவில் கொரோனா வைரஸின் மையமாக இருந்த ஹூபே மாகாணம் நீண்ட நாட்களுக்குப் பின் தற்போது இயல்புநிலைக்கு திரும்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து மைக்கேல் கருத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here